IND vs ENG: அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் விட்டுகொடுக்காத இங்கிலாந்து.. இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!
IND vs ENG 1st ODI: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அடுத்ததாக இந்திய அணி களமிறங்கி 259 ரன்கள் எடுத்தால், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான (IND vs ENG 1st Odi) முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அடுத்ததாக இந்திய அணி களமிறங்கி 259 ரன்கள் எடுத்தால், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிறகு, இந்தியாவும் (Indian Cricket Team) இங்கிலாந்தும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இங்கிலாந்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பிறகு, 47.5 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியா வெற்றிபெற 259 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ALSO READ: முதலிடத்தில் இங்கிலாந்து.. முடிந்த இந்தியாவின் ஆதிக்கம்.. ஐசிசி டி20 தரவரிசை அப்டேட்!
முதலில், இங்கிலாந்து அணி இந்த ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஏனெனில், இங்கிலாந்து வெறும் 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனவே, அதிகபட்சமாக 150 முதல் 180 ரன்கள் வரை மட்டுமே இருக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால், எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜோ ரூட் மற்றும் லியாம் டாசன், இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து அணியை ஒரு நல்ல நிலையில் வைத்தனர். இப்போது இந்திய பேட்ஸ்மேன்கள் சோதிக்கப்படுவார்கள். வெற்றி ரன்களை எடுக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதில் கவனம் இருக்கும்.




இங்கிலாந்தின் இன்னிங்ஸ்
பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்கினர். இந்த ஜோடி இங்கிலாந்துக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அந்த ஜோடி பிரிந்ததால், இங்கிலாந்தின் இன்னிங்ஸ் சரிந்தது. ஜேக்கப் பெத்தேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து பென் டக்கெட் 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு, அடுத்தடுத்து மேலும் நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் ஹாரி புரூக், ஜஸ்பிரித் பும்ராவால் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லரால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சாம் கரனால் தனது கணக்கைத் தொடங்கக்கூட முடியவில்லை. வில் ஜாக்ஸும் நீண்ட நேரம் நீடிக்காமல் 20 ரன்கள் எடுத்த பிறகு பெவிலியன் திரும்பினார்.
ALSO READ: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?
இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட்டும் லியாம் டாசனும் ஏழாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லியாம் டாசன் 83 பந்துகளில் 68 ரன்களும், ஜோ ரூட் 76 பந்துகளில் 76 ரன்களும் எடுத்தது. அதேநேரத்தில், இந்திய அணிக்காக அக்சர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், குனூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திருந்தனர்.