உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு… நல்ல படங்கள குடுங்க – விஷ்ணு விஷாலை புகழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!
Actor Rajinikanth Praised Gatta Kusthi 2 Movie | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் கட்டா குஸ்தி 2. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கட்டா குஸ்தி. இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அதன்படி படம் கடந்த 3-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதன்படி கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி இரண்டு வாரஙக்ளைக் எட்டியுள்ள நிலையில் படம் இதுவரை 40 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து உள்ளார்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஷ்ணு விஷாலை புகழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்:
என்ன ஒரு படம்! மிகவும் கலகலப்பான, பொழுதுபோக்கு நிறைந்த படம். இப்போதெல்லாம் இது போன்ற படங்கள் வருவதே இல்லை, இல்லையா? நீங்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். ஐஸ்வர்யா லக்ஷ்மியும் அருமையாக நடித்திருக்கிறார். அந்தச் சிறுமி ஸாராவை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? அவர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். விஷ்ணு, கதைத் தேர்வில் உங்களுக்குச் சிறந்த ரசனை இருக்கிறது. இதுபோல இன்னும் பல சிறந்த படங்களை எங்களுக்குத் தாருங்கள்.
கட்டா குஸ்தி படத்தைப் பார்த்த பிறகு, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது; இந்தப் பயணத்தின் மிகச் சிறந்த தருணமே அவரிடமிருந்து அந்த அழைப்பைப் பெற்றதுதான். அவர் கூறிய வார்த்தைகள் எனது அடுத்தகட்டப் பயணத்திற்குப் பெரும் ஊக்கமாக அமையும். மிக்க நன்றி ஐயா என்று விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Also Read… அந்த படத்தை இயக்கியது மிகப்பெரிய தவறு – இயக்குநர் லிங்குசாமி
நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
“Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla… pic.twitter.com/rFGl4y4gvk
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) July 14, 2026