கிராமங்களின் ஒற்றுமையையும் திறமையையும் கொண்டாடும் கிராமோத்சவம் – ஈஷாவின் புதிய முயற்சி
விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஈஷாவின் கிராமோத்சவம் என்ற கிராமப்புற விளையாட்டுத் திருவிழா, கிராம மக்களை ஒருங்கிணைப்பதோடு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஈஷாவின் கிராமோத்சவம் என்ற கிராமப்புற விளையாட்டுத் திருவிழா, கிராம மக்களை ஒருங்கிணைப்பதோடு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிராமப்புற விளையாட்டு விழாக்களை மையப்படுத்தி ஈஷா அறக்கட்டளையின் சார்பில் ஈஷா கிராமோத்சவம்’ என்ற விழா 18வது முறையாக நடைபெறவுள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விளையாட்டு விழாவில், 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 80,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ‘கேலோ இந்தியா’ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இப்போட்டியில், 7,000க்கும் மேற்பட்ட அணிகளும், சுமார் 15,000 பெண் விளையாட்டு வீராங்கனைகளும் பங்கேற்று, மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான ரொக்கப் பரிசுகளுக்காகப் போட்டியிடவுள்ளனர்.
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு விழாவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலான ஈஷா அறக்கட்டளை, இந்த முக்கிய கிராமப்புற விளையாட்டு விழாவின் 18-வது பதிப்பை வெகு விமரிசையாக நடத்தத் தயாராகி வருகிறது. ஈஷா கிராமோத்சவம், 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 80,000க்கும் மேற்பட்ட வீரர்களை ஒன்றிணைக்கிறது. ‘கேலோ இந்தியா’ அங்கீகாரம் பெற்ற இப்போட்டியில் 7,000க்கும் மேற்பட்ட அணிகளும், சுமார் 15,000 பெண் பங்கேற்பாளர்களும் இடம்பெறுவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டியின் பல்வேறு நிலைகளில் மொத்தம் ரூ.1 கோடி ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த மாபெரும் கிராமப்புற விளையாட்டு விழா, ‘ஈஷா அவுட்ரீச் – கிராமப்புற மறுமலர்ச்சிக்கான செயல்பாடு என்ற முன்னெடுப்பின் கீழ் நடத்தப்படுகிறது. ஈஷா கிராமோத்சவம் 2026-ன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய இடங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் isha.co/gramotsavam என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
விளையாட்டு மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு ஊக்கமளித்தல், அவர்களைப் போதைப் பழக்கங்களிலிருந்து திசைதிருப்புதல் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலை ஊக்குவித்தல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அந்தந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பங்கேற்கும் இறுதிப் போட்டிகள், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில், புகழ்பெற்ற ஆதியோகி சிலைக்கு முன்பாக செப்டம்பர் 4 முதல் 6 வரை நடைபெறும்.