மலேசியாவில் நடைபெறும் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச்? வைரலாகும் தகவல்
Superstar Rajinikanths Jailer 2 Movie Audio Launch Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பல ஹிட் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் நடிகர் ரஜினிகாந்த் படங்களில் நடித்து உள்ளார். சுமார் 75 வயதைக் கடந்த நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வருடத்திற்கு ஒரு படம் என்ற ரீதியிலாவது படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்தை தொடந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தி பான் இந்திய மொழிகளில் இருந்து பல பிரபலங்கள் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த ஜெயிலர் 2 படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




மலேசியாவில் நடைபெறும் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச்?
இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வந்தது.
அதன்படி தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தை போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை நடத்திய டத்தோ மாலிக் அதனை நடத்த உள்ளதாகவும் அவர் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Sai Abhyankkar: சாய் அபயங்கரின் நியூ இன்டீ பாடலில் இணையும் பிரபல நடிகை.. அட அவர்தான்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 Audio Launch planned in Malaysia. Recently Dato Malik (Malik Streams) met #SuperstarRajinikanth and discussed on it.
It’s worth mentioning that Rajinikanth’s Endhiran audio launch was held in the same country. pic.twitter.com/pvrKQl1S1q
— Studio Flicks (@StudioFlicks) July 14, 2026
Also Read… ஹார்ட் பீட் சீசன் 3 சீரிஸ் ரசிகர்களே ரெடியா.. ரிலீஸ் தேதியுடன் வெளியான புரோமோ!