AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ பட இயக்குநர் செழியன் காலமானார்.. தாளாத சோகத்தில் தமிழ் திரையுலகம்!!

'கல்லூரி', 'பரதேசி' படங்களின் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் இரா.செழியன் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வளசரவாக்கத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி அஞ்சலி குறித்த முழு விவரங்கள் உள்ளே!

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ பட இயக்குநர் செழியன் காலமானார்.. தாளாத சோகத்தில் தமிழ் திரையுலகம்!!
ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jul 2026 08:06 AM IST

தமிழ் சினிமாவின் யதார்த்தமான காட்சிப் பதிவுகளுக்கும், கலை நேர்த்திமிக்கத் திரைப்படங்களுக்கும் பெயர் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ (To Let) திரைப்படத்தின் இயக்குநருமான இரா.செழியன்  இன்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தெலுங்கு திரையுலகில் சோகம்.. நடிகர் ஷோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி காலமானார்

தரமணி மருத்துவமனையில் இறுதி மூச்சு:

கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த செழியன், சென்னை தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

பி.சி.ஸ்ரீராமின் அணுக்கமான சீடர்:

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் செழியன். அவரிடம் ஒளிப்பதிவின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, பின்னர் தனித்துவமான ஒளிப்பதிவாளராக உருவெடுத்தார்.

இயக்குநர் பாலா, சீனு ராமசாமி போன்ற முன்னணி இயக்குநர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார். குறிப்பாக, ‘கல்லூரி’, தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’, மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ ஆகிய திரைப்படங்களில் இவரது ஒளிப்பதிவு உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. இயற்கை ஒளியைப் (Natural Lighting) பயன்படுத்தி காட்சிகளை உயிரோட்டமாக மாற்றுவதில் இவர் வல்லவர்.

உலக அரங்கில் தமிழ் சினிமாவை உயர்த்திய ‘டூலெட்’:

ஒளிப்பதிவாளராகப் புகழின் உச்சத்தில் இருந்த செழியன், இயக்குநராக அவதாரம் எடுத்து இயக்கிய முதல் திரைப்படம் ‘டூலெட்’. சென்னையில் வாடகை வீடு தேடும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வலியைப் பேசும் எளிய கதையாக இது உருவாக்கப்பட்டது.

இத்திரைப்படம் 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் சர்வதேச திரைப்பட விழாக்களில் (International Film Festivals) திரையிடப்பட்டு 30-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்து சாதனை படைத்தது. மேலும், இந்திய அரசின் 65-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது’ பெற்று, தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்தது.

எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்:

திரைப்படம் தாண்டி செழியன் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட. ஆனந்த விகடன் இதழில் உலக சினிமாக்கள் குறித்து இவர் எழுதிய ‘உலக சினிமா’ தொடர் மற்றும் ‘ஜன்னலுக்கு வெளியே உலக சினிமா’ ஆகிய புத்தகங்கள் சினிமா பயிலும் மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது. மேற்கத்திய இசை மற்றும் இலக்கியங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!

வளசரவாக்கத்தில் அஞ்சலி:

மறைந்த இயக்குநர் செழியனின் உடல், இன்று காலை 10 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ‘ராவணன் குடிலில்’ பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்குப் பல்வேறு இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகத் தொழில்நுட்பக் கலைஞர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow Us