Kasthuri Raja: தனுஷ் அரசியலுக்கு வருவாரா? தனது கருத்தை சொன்ன கஸ்தூரி ராஜா!
Kasthuri Raja Responds To Dhanush Political Speculation: தமிழ் சினிமாவில் சமீப நாட்களாக தனுஷ் அரசியல் வருவதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. அந்த விதத்தில் அண்மையில், லவ் ஓ லவ் என்ற படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தனுஷ் அரசியலில் நுழைகிறாரா என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் (Dhanush) கோலிவுட் சினிமாவையும் கடந்து, பான் இந்திய சினிமா வரையிலும் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்க தொடங்கிய இவர், தற்போது தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் கர (Kara). இதை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh raja) இயக்க, கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு பின் தனுஷ் ஒப்பந்தமாகி நடித்துவரட்டும் படம் ஓம் (OM). இதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷே தயாரிப்பாளராக தயாரிக்கிறார். அந்த விதத்தில் சில நாட்களுக்கு முன், தனுஷின் ரசிகர்கள் மன்ற விழா ஒன்றில் தனுஷின் புது கொடி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் அதின் நடுவே தனுஷின் படம் என அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கொடியானது அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தனுஷ் அரசியல் வருகிறாரா? என அனைவரிடமும் கேள்வியை எழுப்பியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா (Kasthuri Raja), தனது பேரனின் லவ் ஓ லவ் என்ற பட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அதில் அவர், தனுஷின் அரசியல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!
தனுஷ் அரசியல் வருகிறாரா என்பது குறித்து தனது கருத்தை சொன்ன கஸ்தூரி ராஜா:
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம், “தனுஷ் அரசியல்வாருவதாக கூறப்படுகிறது, புது கொடி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நீங்களும் முன்பே என் மகன் அரசியல் வரலா அல்லது எனது பேரன் அரசியல் வரலாம் என கூறினீர்களே, தனுஷ் உண்மையில் அரசியலுக்கு வருகிறாரா?” என செய்தியாளர் கேள்விகேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, “அதை அவரிடம்தான் (தனுஷ்) கேட்கவேண்டும்” என பதிலளித்திருந்தார். அந்த விதத்தில் உண்மையிலே தனுஷ் அரசியலில் நுழைகிறாரா என பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
தனுஷ் பற்றி கஸ்தூரி ராஜா பேசியது தொடர்பான வீடியோ:
#Dhanush ‘s dad replies about his political entry..
. pic.twitter.com/vllTVPyzmM— Gv (@gowtham0725) July 9, 2026
அரசியல் குறித்த கேள்விக்கு தனுஷின் ரியாக்ஷன் :
அண்மையில் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த தனுஷிடம் செய்தியாளர் ஒருவர், நீங்கள் ரசிகர்கள் மன்ற கொடியை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் அரசியல் வருவீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு தனுஷ் சிரித்தபடியே, எந்தவித பதிலும் சொல்லாமல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!
இன்னும் தனுஷ் இது குறித்து விரிவான விளக்கம் கொடுக்காத நிலையில், ரசிகர்கள் மத்தியில் அது பெரும் ஆர்வத்தையும், ஒருவேளை தனுஷ் அரசியல் வந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் மிகைப்படுத்திவருகிறது.



