AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Atharvaa: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!

Atharvaa Meets CM Vijay: கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இளம் நடிகராக இருந்துவருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் இதயம் முரளி என்ற படமானது வெளியாகி தயாராகியிருக்கும் சமயத்தில், தற்போது அவர் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Atharvaa: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!
முதல்வர் விஜயை சந்தித்த அதர்வா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Jul 2026 16:32 PM IST

இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனின் (Aakash Baskaran) இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புது படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இதில் நடிகர் அதர்வா (Atharvaa) லீட் நயாகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) மற்றும் கயாடு லோஹர் (Kayadu Lohar) இணைந்து நடித்துள்ளனர். எமோஷம், ஒருதலை காதல் போன்ற கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் மீது சிறப்பான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த சமயத்தில் நடிகர் அதர்வா, தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜயை (CM Vijay) நேரில் சந்தித்துள்ளார்.

தற்போது முதல்வராக விஜய் பணியாற்றிவரும் நிலையில், இவர் தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்களை சந்தித்துவருகிறார். அந்த விதத்தில் தற்போது நடிகர் அதர்வாவும் முதல்வரை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவரை முதல்வராக நேரில் சந்தித்தது மற்றும் அதி குறித்து தனது சோஷியல் மீடியாவின் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் DQ41 பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்தது தொடர்பாக அதர்வா பகிர்ந்த விஷயம்:

அந்த பதிவில் அதர்வா, “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்தது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனக்கு அவர் எப்போதும், நமது விஜய் அண்ணாதான். அந்த பெரிய நாளுக்கு முன்பு, அவரது அன்பையும், ஆசீர்வாதங்களையும் பெறுவது எனக்கு எல்லாமே ஆகும். நன்றி அண்ணா (முதல்வர் விஜய்). உண்மையிலேயே பணிவு கொள்கிறேன். நன்றியுணர்வால் நிரம்பி வழிகிறேன். மிகுந்த நேர்மறை உணர்வுடன் இருக்கிறேன்” என அதில் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!

முதல்வரை சந்தித்தது தொடர்பாக நடிகர் அதர்வா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அதர்வாவின் இதயம் முரளி படமானது நாளை (10/07/2026) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் அதர்வாவுடன் நடிகர் ஃபஹத் பாசில், இசையமைப்பாளர் தமன் எஸ், ரக்ஷன், டிரவித் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படம் வெளியாகி அதர்வாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us