இதுதான் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியா? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Release Date Viral On Social Media | தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் எப்போது திரய்ரங்குகளில் வெளியாக உள்ளது என்று புதிய அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan Movie). இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்று தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் எதும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக ஜன நாயகன் படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் முழுவதுமாக லீக் செய்யப்பட்டது. அந்தப் லீக் செய்யப்பட்ட பதிவை பலரும் பார்த்துவிட்டனர். இதனால் படத்திற்கு பெரிய பாதிப்பு இருக்குமோ என்று நினைத்து வந்த நிலையில் மக்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதே அளவில் உள்ளது. மேலும் அதே நேரத்தில் படத்தை இணையத்தில் கசிய விட்ட நபர்களை கைது செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து சென்சார் பிரச்சனை இழுத்துக்கொண்டே இருந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் இந்தப் படத்தின் வெளியீடு இந்த ஜூலை மாதமே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.




இதுதான் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியா?
இந்த நிலையில் படங்களை தொடர்ந்து வெளிநாட்டு வெளியீட்டு உரிமையைப் பெற்று வரும் யார்க் சினிமாஸ் தற்போது தங்களது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி அந்தப் பதிவில் ஜன நாயகன் படம் வருகின்ற 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன? வைரலாகும் தகவல்
யார்க் சினிமாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
🔥 Finally! Our Own Thalapathy Vijay is ready to set the big screen on fire with #JanaNayagan💥
🇨🇦 Canada Release by York Cinemas
🎬 Igniting screens from July 24.Get ready for the ultimate theatrical celebration.
Stay tuned for tickets 🎫#thalapathyvijay #yorkcinemas pic.twitter.com/CcyiZAZqUp— York Cinemas (@yorkcinemas) July 8, 2026
Also Read… பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்