AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா? வைரலாகும் தகவல்

Sivakarthikeyans Maaveeran 2 movie update | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவகா உள்ள மாவீரன் 2 படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா? வைரலாகும் தகவல்
மாவீரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2026 16:54 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கிய இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு பெரும்பாலும் காமெடி சப்ஜெக்டை தேர்வு செய்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடி கதைகளில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல சீரியசான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி அந்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா?

சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த பாகத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இப்பணி 2028-ஆம் ஆண்டில்தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர் மடோன் அஸ்வின் நடிகர் கார்த்தியிடமும் ஒரு கதைக்கருவைக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பவர் பேக் ஆக்ஷன்.. தனது 38வது படத்திற்கு மாஸாக தயாராகும் அருண் விஜய்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 14 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட்டான நான் ஈ படம்

Follow Us