Sai Abhyankkar: அல்லு அர்ஜுன் சார் ஒரு சிறந்த இசை ரசனையாளர் – சாய் அபயங்கர்
Sai Abhyankkar About Allu Arjun: தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் இசையமைப்பாளராக கவர்ந்துவருபவர் சாய் அபயங்கர். இவர் அல்லு அர்ஜுனின் ராக்கா என்ற பான் இந்திய படத்த்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அல்லு அர்ஜூனுடன் பணியாற்றும் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் சிறந்த இளம் இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பென்ஸ் (Benz) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். தமிழில் இவரின் இசையில் டியூட் (Dude) மற்றும் கருப்பு (Karuppu) என இரு படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த இரு படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. அதிலும், சூர்யாவின் கருப்பு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்றிருந்த “கருப்பா கூட வா” என்ற பாடல் இன்றளவிலும் வரவேற்பை பெற்றுவருகிறது. இவரின் இசையமைப்பில் இரு படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், தற்போது பலகோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் பான் இந்திய படத்திலும் இவர் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.
இயக்குநர் அட்லீ (Atlee) இயக்க, அல்லு அர்ஜுன் (Allu Arjun) நாயகனாக நடிக்கும் படம்தான் ராக்கா. இப்படத்தின் இசையமைப்பாளராகவே சாய் அபயங்கர் பணியாற்றிவருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய், அல்லு அர்ஜூனுடன் பணியாற்றும் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: சாய் அபயங்கர் பிஆர் மூலம் பிரபலமாவதாக கூறுகிறார்கள் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
அல்லு அர்ஜூனுடன் ராக்கா படத்தில் பணியாற்றுவது குறித்து பகிர்ந்து சாய் அப்யங்கர்:
நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் அப்யங்கர், “அல்லு அர்ஜுன் சாரை சந்திக்கும்போது பதட்டமாக இருந்தேன். ஏனென்றால் எது எடுபடுமா?, ஈடுபடாதா என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் தற்போதைய போக்கோடு ஒன்றிப் போனவர். ராக்கா படத்தைக் காட்டியபோது எனக்குப் பயமாக இருந்தது.
இதையும் படிங்க: எல்லா பெரிய விஷயங்களுக்கும் ஆரம்பம் சின்ன இடம்தான்… மாஸாக குட்டி ஸ்டோரி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!
இதுவரை இருக்கும் சரியான இசை வகைகளைப் பற்றியும், அட்லீ அண்ணாவுடனும் நாங்கள் விவாதித்தோம். மேலும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு என்ன பிடிக்கும் என்பது குறித்தும் நாங்கள் பேசியிருந்தோம். குறிப்பாக சொல்லப்போனால், அல்லு அர்ஜுன் சார் ஒரு சிறந்த இசை ரசனையாளர்” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார்.
அல்லு அர்ஜுன் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ:
#SaiAbhyankkar:
“I was very nervous when I’m going to meet #AlluArjun sir, because he knows what will work and what doesn’t work💯. He is intact with the Pulse. I had fear when I shown him #Raaka work😀. We discuss about the proper genre which exist till now & also with #Atlee…— AmuthaBharathi (@CinemaWithAB) July 3, 2026
சாய் அபயங்கர் தற்போது தொடர்ந்து புது புது படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். தமிழில் இவர் மார்ஷல், ஓம், பென்ஸ், சூர்யா48, ராக்கா, DV04 மற்றும் பல்வேறு படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.