சாய் அபயங்கர் பிஆர் மூலம் பிரபலமாவதாக கூறுகிறார்கள் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
RJ Balaji talks about Sai Abhyankar PR issue | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய போது இசையமைப்பாளர் சாய் அபயங்கர் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடர்களாக வலம் வருபவர்கள் திப்பு மற்றும் ஹரிணி. இவர்களின் ஒரே மகன் தான் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் சுயதீன பாடல்களை எழுதி இசையமைத்து நடித்தும் வந்தார். அந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இணையத்திலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து சாய் அபயங்கருக்கு தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு வரிசையாக குவிந்து வந்தது. குறிப்பாக மலையாள சினிமாவில் நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் வெளியான பல்டி என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் டியூட் மற்றும் கருப்பு ஆகியப் படங்கள் இதுவரை இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் வெளியாகி ரசிகர்களிடையே நலல் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக இசையமைத்து வருவது மட்டும் இன்றி தொடர்ந்து படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.




சாய் அபயங்கர் பிஆர் மூலம் பிரபலமாவதாக கூறுகிறார்கள்:
இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் விருது விழாவில் விருதுகளை வென்ற போது அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பல விசயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது, சாய் அபியங்கர் விளம்பர உத்திகள் (PR) மூலம் பரபரப்பை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு, திரையரங்குகளில் உற்சாகத்தை ஊட்டி, நடனமாடத் தூண்டும் வகையிலான பாடல்களை அவர் வழங்குகிறார். அவரது இசை மூலமாகவே அவர் பெறும் அந்த அளவிலான வரவேற்பை, எந்தவொரு விளம்பர உத்தியாலும் சாதித்துவிட முடியாது என்று ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
Dir #RJBalaji about #SaiAbhyankkar:
They say Sai Abhyankkar is using PR to create hype. But after a long time, he’s delivering energetic, dance-worthy songs that truly light up theatres. No amount of PR can achieve the kind of reach he’s earning through his music alone.… pic.twitter.com/dsChVwhhpq
— Movie Tamil (@_MovieTamil) July 3, 2026
Also Read… அருண் விஜய்க்கு ஜோடியாகும் ஜெயிலர் பட நடிகை? அட இந்த படமா?