AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜப்பானில் வெளியாகும் துரந்தர் 2.. ரன்வீர் சிங் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

Ranveer Singhs Invitation to Japanese Fans: பாலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் பிரம்மாண்டமான வசூலை பெற்று பிரம்மாண்ட படமாக அமைந்ததுதான் துரந்தர் தி ரிவெஞ்ச். ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் இணைந்து நடித்திருந்த இப்படமானது இந்தியாவில் வெளியாகி ஹிட்டாகிய நிலையில், ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் வெளியாகும் துரந்தர் 2.. ரன்வீர் சிங் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
துரந்தர் 2 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Jul 2026 21:44 PM IST

இந்தி சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவரின் நடிப்பில் பல பிரம்மாண்ட படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் 2025ம் ஆண்டு இறுதி மற்றும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் என அடுத்தடுத்து வெளியாகி சிறப்பான வசூலையும், வரவேற்பையும் கொடுத்த படம்தான் துரந்தர் 1 மற்றும் 2 (Dhurandhar 1 & 2). இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் (Aditya Dhar) இயக்க, ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இரு பாகங்களாக வெளியாகிய இந்த படமானது இதுவரை கிட்டத்தட்ட ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என கூறலாம்.

இந்த படத்தில் ரன்வீர் சிங், “ஹம்சா” என்ற வேடத்தில் நடிக்க, அவருடன் சாரா அர்ஜுன் (Sara Arjun), சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது கடந்த 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றிருந்த இப்படமானது, ஜப்பானிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிளாஸ்ட் பட இயக்குநருடன் இணையும் சியான் விக்ரம்? – வைரலாகும் தகவல்!

ஜப்பானிலும் வெளியாகும் துரந்தர் 2:

ரன்வீர் சிங் உளவாளியாக நடித்து அசத்தியிருந்த படம் துரந்தர் 2. இந்த படமானது இந்தியாவில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 1800 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்றிருந்தது. அந்த வகையில், தற்போது ஜப்பானிலும் வெளியாகவுள்ளதாம். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில், ஜப்பானில் வெளியாகிறதாம். ஜப்பானிய ரசிகர்களுக்காக இப்படம் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீர் சிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்.. ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக பார்த்த 1.20 கோடி பேர்.. அதிர்ச்சியில் படக்குழு!

துரந்தர் 2 பட ஜப்பானிய வெளியீடு குறித்து ரன்வீர் சிங் வெளியிட்ட வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Jio Studios (@officialjiostudios)

அந்த வீடியோவில் பேசிய ரன்வீர் சிங், “ஜப்பானில் உள்ள அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். துரந்தர் 2 படமானது வரும் ஜூலை 10ம் தேதியில் ஜப்பானில் வெளியாகிறது. அதீத ஆக்ஷன், எமோஷன் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட படம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த, மிகப்பெரிய இந்த அனுபவத்தய் திரையில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.

Follow Us