Dhurandhar 2: நெட்ஃபிலிக்ஸ் ட்ரெண்டிங்கில் பாகிஸ்தானில் முதலிடத்தை பிடித்த துரந்தர் 2 – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Dhurandhar 2 Netflix Sensation: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுனின் இணைந்து நடித்திருந்த திரைப்படம்தான் துரந்தர் 2. இப்படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், மே 14ம் தேதியில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஸ்பை கதைக்களத்தில் வெளியான இப்படம் தற்போது பாகிஸ்தானில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளதாம்.
இந்தி சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியில் துரந்தர் பார்ட் 1 (Dhurandhar 1) படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மார்ச் 19ம் தேதியில் துரந்தர் பார்ட் 2 (Dhurandhar 2) படமானது, பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படமானது ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் (Sara Arjun), ஆர். மாதவன் (R.Madhavan), அக்ஷய் கன்னா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது படமானது திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 1,800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 2026 மே 14ம் தேதியில், துரந்தர் பார்ட் 2 படமானது நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகியிருந்தது. இப்படம் நெட்ஃபிலிக்ஸில் இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், மேலும் பாகிஸ்தானிலும் (Pakistan) நெட்ஃபிலிக்ஸில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: 2001ல் அரசியலுக்கு வந்திருந்தால் 100% ஜெயிச்சிருப்பேன் – அரசியல் குறித்து பேசிய ரஜினிகாந்த்
பாகிஸ்தானில் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடம் பெற்ற துரந்தர் 2:
ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 திரைப்படமானது பாகிஸ்தானில் ஸ்பையாக வேலை செய்யும், இந்தியனாக இருக்கும் ஒரு நபர் பாகிஸ்தானிற்கே டானாக மாறியது எவ்வாறு, என்பதை மையப்படுத்திய கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்திய ஸ்பை பாகிஸ்தானிய தீவிரவாதிகளை எவ்வாறு ஒழித்தார் என்பதை மையப்படுத்தி இப்படமானது அமைந்த நிலையில், இந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படமானது அரபு நாடுகளில் வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தனது பெண் குழந்தைக்கு பெயரிட்ட அட்லீ – பிரியா தம்பதி.. என்ன பெயர் தெரியுமா?
அந்த வகையில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியானது உலகமெங்கும் இருக்கும் நிலையில், பாகிஸ்தானிலும் மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகமாக துரந்தர் 2 படத்தய் பார்த்துவரும் நிலையில், அங்கு நெட்ஃபிலிக்ஸில் துரந்தர் 2 படமானது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளதாம். இது தற்போது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பாகிஸ்தானிற்கு எதிரான படம், பாகிஸ்தானிய மக்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்கிறதா! என அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துரந்தர் 2 படத்தின் நெட்பிளிக்ஸ் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
DHURANDHAR THE REVENGE (Raw and Undekha) is now on Netflix in the US & Canada! pic.twitter.com/oQlcaZzul6
— Netflix (@netflix) May 15, 2026
உலகமெங்கும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் ஜூன் 4ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் நெட்ஃபிலிக்ஸில் துரந்தர் 2 படமானது நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.