AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chiranjeevi: பெத்தி பட 3 நிமிட ட்ரெய்லர்.. முழுக்க அனல் பறக்கும் – அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!

Chiranjeevis Peddi Trailer Review: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் பெத்தி என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்து, நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Chiranjeevi: பெத்தி பட 3 நிமிட ட்ரெய்லர்.. முழுக்க அனல் பறக்கும் – அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!
பெத்தி பட ட்ரெய்லர் பற்றி சிரஞ்சீவி Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 May 2026 19:28 PM IST

டோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் 16வது திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளதுதான் பெத்தி (Peddi). இந்த படத்தை பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இவருக்கு தெலுங்கில் இது இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது மல்யுத்தம் தொடர்பான ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர் ராம் சரண் பைல்வானாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையமைத்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 மே 18ம் தேதியில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில், இப்படத்தின் ட்ரெய்லர் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி (Chiranjeevi ) எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

பெத்தி படத்தின் ட்ரெய்லர் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்ட சிரஞ்சீவி:

அந்த பதிவில் நடிகர் சிரஞ்ஜீவி, “பெத்தி படத்தின் ட்ரெய்லரை பார்த்தேன், அட வாவ். 3 நிமிட ட்ரெய்லர், முழுக்க முழுக்க அனல் பறக்கும். சரண், புச்சி, ரஹ்மான் ஒவ்வொருவரும் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒன்றாக இணைந்து கலக்கிவிட்டார்கள். இந்த டிரெய்லர் நீங்கள் கற்பனை செய்ததை விடவும் மேலானது.
உணர்ச்சி, எழுச்சி, வெறி, எல்லாமே அடுத்த கட்டத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஒரு முக்கியமான ஷெட்யூலை விருஷகர்மா படக்குழு

நான் சொன்னதுபோல, கொஞ்சம் லீக் கொடுத்து நாளாகிவிட்டது. “நான் விளையாடிவிட்டதாக நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்கள்… நான் போராடினேன் சார்” என பெத்தி பட டயலாக்கை பகிர்ந்து, அதற்கு பிறகு, “இயக்குநர் புச்சி பாபு மன்னிக்கவும், ட்ரெய்லரை பார்த்தபிறகு என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை” என அதில் நடிகர் சிரஞ்சீவி குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

பெத்தி ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி :

ராம் சரணின் பெத்தி பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் உள்ள போபல் என்ற இடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் பெத்தி பட ட்ரெய்லர் அந்த நிகழ்ச்சியில் வைத்து வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us