AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜஸ்தானில் ஒரு முக்கியமான ஷெட்யூலை விருஷகர்மா படக்குழு

Naga Chaitranyas Vrushakarma Movie Shooting Completed In Rajasthan | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைத்தன்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் விருஷகர்மா படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைப்பெற்று வந்த நிலையில் அந்த ஷெடியூல் முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் ஒரு முக்கியமான ஷெட்யூலை விருஷகர்மா படக்குழு
நாக சைத்தன்யா மற்றும் மீனாட்சி சௌத்ரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 May 2026 17:45 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. தொடர்ந்து இளம் தலைமுறையினருக்கு டஃப் கொடுக்கும் வகையில் பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாகர்ஜுனார். இவரது மூத்த மகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் நாக சைத்தன்யா. ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். தொடர்ந்து கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் நாக சைத்தன்யா.

இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு தண்டேல் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து இருந்தார். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நாக சைத்தன்யா விருஷகர்மா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ராஜஸ்தானில் ஒரு முக்கியமான ஷெட்யூலை விருஷகர்மா படக்குழு:

இந்த விருஷகர்மா படத்தை இயக்குநர் கார்த்திக் தண்டே எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி இணைந்து நட்டித்து உள்ளார். சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது ராஜஸ்தானில் படத்தின் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஜய் குறித்து ரசிகர் பேசியபோது த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ

விருஷகர்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

Follow Us