சிவகார்த்திகேயனின் வேலும் மயிலும் ஆல்பம் பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது
Velum Mayilum Album Video Song Gets 1 Million Views | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இவர் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் அதிக அளவில் காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிக அளவில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதுவரை இவர் தமிழ் சினிமாவில் மட்டும் 25 படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பராசக்தி படம் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது 26-வது படத்திற்காக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. சேயோன் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.




வேலும் மயிலும் ஆல்பம் பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது:
இந்த நிலையில் சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே வேலும் மயிலும் என்ற ஆல்பம் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி நடித்து உள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்வைப் பெற்று உள்ள நிலையில் தற்போது 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது வேலும் மயிலும் பாடல் குழு. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு படத்தின் 9 மணி சிறப்பு காட்சி ரத்தாக என்ன காரணம்? தயாரிப்பாளர் சொன்ன விசயம்
சிவகார்த்திகேயன் புரடெக்ஷன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
1 MILLION VIEWS for #VelumMayilum #வேலும்மயிலும் ❤️🦚🙏
From every prayer whispered with faith…⁰to every heart that found peace through this song – thank you for embracing #VelumMayilum with so much love and devotion.
ICYMI: https://t.co/6WJweq5WKL@Siva_Kartikeyan ✍🏻… pic.twitter.com/EmZTX2bNC2
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 15, 2026
Also Read… ஜன நாயகன் படக்குழுவிற்கு விஜய் வைத்த கோரிக்கை – வைரலாகும் தகவல்