AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivekarthikeyan: வேலும் மயிலும்.. சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் முதல் இன்டீ பாடல் வெளியானது!

Sivakarthikeyans Velum Mayilum Song : நடிகராக இருப்பதை தொடர்ந்து படங்களை தயாரித்துவருபவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இவர் முதல் முதலாக இன்டீ பாடல் ஒன்றை தயாரித்துள்ளார். வேலும் மயிலும் என்ற பக்தி பாடலான இது, தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sivekarthikeyan: வேலும் மயிலும்.. சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் முதல் இன்டீ பாடல் வெளியானது!
வேலும் மயிலும் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 May 2026 18:07 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகராக நடிப்பதை தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனும் (Sivakarthikeyan) தனது பெயரிலே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை வைத்து நடத்திவருகிறார். இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கனா (Kanaa), தாய் கிழவி (Thaai Kizhavi) போன்ற பல வெற்றி படங்கள் தயாராகியிருக்கிறது. இந்நிலையில் இவரின் தயாரிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இதில் ராதிகா சாத்குமார் (Radhika Sarathkumar) நாயகியாக நடித்திருந்த நிலையில், மொத்தமாக ரூ 90 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் பல தயாரிப்பு நிறுவனகள் தங்களின் தயாரிப்பில் ஆல்பம் பாடல், அதாவது இன்டீ பாடல்களை தயாரித்து வெளியிட்டுவருகிறது.

அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் “வேலும் மயிலும்” (Velum Mayilum) என்ற பக்தி பாடலை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அந்த வகையில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமையை போன்றும் பாடலாக தயாராகியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எங்க கண்முன்னே சர்கார் பட போஸ்டர்களை கிழித்தார்கள்.. நானும் அவரும் கண்ணீருடன் அதை பார்த்தோம் – மனமுடைந்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்!

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வேலும் மயிலும் இன்டீ பாடல் பதிவு:

இந்த வேலும் மயிலும் என்ற பாடலை நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். மேலும் இதை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தனது குரலில் பாடி, இசையமைத்திருக்கிறார். முருகனின் பெருமையை கூறும் பக்தி பாடலாக தயாராகியுள்ள நிலையில், இந்த வீடியோ பாடலை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த் வேலும் மயிலும் என்ற இன்டீ பாடலில் நடிகர் சிவகார்த்திகேயனும் இடம்பெற்றுள்ளார். கையில் வேலுடன் இந்த வீடியோவில் இருக்கிறார். இப்படலானது முருகனின் பெருமையை மக்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சியான் 63 படத்தில் இணைந்தார் சர்வம் மாயா பட நடிகை ரியா ஷிபு

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சேயோன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதன் ப்ரீ ப்ரொடக்ச்ஸ்ன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். இதை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காந்தா பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us