AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kamal Haasan: திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது… அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது – கமல்ஹாசன் பேச்சு!

Kamal Haasan Praises CM Vijay: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும், அரசியல்வதியாகவும் இருந்துவருபவர் கமல்ஹாசன். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் விஜய் மதுபான கடைகளை மூடப்பட்டது மற்றும் அவர் முதல்வராக பதிவியேற்றது பற்றியும் பேசியுள்ளார்.

Kamal Haasan: திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது… அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது – கமல்ஹாசன் பேச்சு!
கமல்ஹாசன் மற்றும் முதல்வர் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 May 2026 15:48 PM IST

கோலிவுட் சினிமாவில் ரசிகர்களால் உலகநாயகன் என எப்போதும் அழைக்கப்பட்டுவருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்ற அரசியல் கட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவரும் நிலையில், இறுதியாக 2025ம் ஆண்டில் தக் லைஃப் (Thug Life) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியில் முடிந்தது. அந்த வகையில் தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர்கள் அன்பரீவ் (Anbariv) இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ள நிலையில், இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்று 2026 மே 13ம் தேதியில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசன், செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின்போது, முதல்வர் விஜய் (CM Vijay) மதுபான கடைகளை மூடியது மற்றும் அவர் திரைத்துறையில் இருந்துவந்தது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் இனி இன்டெர்வியூ கொடுக்கமாட்டாரா? – இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்!

முதலமைச்சர் தளபதி விஜய் குறித்து பேசிய கமல்ஹாசன்:

அந்த சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன், “முதல்வர் விஜய், மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது, இது ரொம்பநாளாக பேசப்பட்டுவந்தது, தற்போது நடந்திருக்கிறது வாழ்த்துக்கள். முதல்வர் விஜயை திரைப்பட நடிகராக மட்டுமே பார்க்கக்கூடாது, அவருக்கு வேறு சில கடமைகளும் இருக்கிறது. அரசியலுக்கு எந்த துறையிலிருந்து வேடுமானாலும் வரலாம். எங்கள் துறையில் (சினிமா) இருந்து வந்திருக்கும் நிலையில் பெருமையாக இருக்கிறது” என அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: ‘சோஃபா செல்கிறது.. புது முதல்வர் செல்கிறார்’.. புஷ்பா பட சீனை குறிப்பிட்டு தவெகவை விமர்சித்த உதயநிதி!

முதல்வர் தளபதி விஜயை பாராட்டி நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாகவும், நடிகராகவும் தொடர்ந்து இருக்கிறார். இவரின் நடிப்பிலும் படங்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டில் எந்த படமும் வெளியீட்டிற்கு தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடிக்கவுள்ள புது பட ஷூட்டிங்கும், ஜூலை மதத்திற்கு பிறகே தொடங்கும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us