லோகேஷ் கனகராஜ் இனி இன்டெர்வியூ கொடுக்கமாட்டாரா? – இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்!
Rathna Kumar About Lokesh Kanagaraj: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது அல்லு அர்ஜுனின் AA23 படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இனிமேல் எந்த நேர்காணல்களில் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மேயாத மான் (Meyadha Maan) என்ற படத்தை இயக்கி, தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார் (Rathnakumar) . இவர் தமிழில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும், அதிக படங்களில் வசனகர்த்தாவாகவும், கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) நெருங்கிய நண்பர் என்ற நிலையில், மாஸ்டர் (Master) முதல் கூலி (Coolie) வரை லோகேஷ் இயக்கிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் சமீபத்தில், 29 தி பிலிம் (29 The film) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2026 மே 8ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
மேலும் இயக்குநர் ரத்னகுமார் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) AA23 படத்திலும் எழுத்தாளராக லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ரத்னகுமார். லோகேஷ் கனகராஜ் தன்னிடம், இனி எந்த இண்டெர்வியூவிலும் கலந்துகொள்ள விரும்பவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க; என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!
லோகேஷ் கனகராஜின் திடீர் முடிவு குறித்து இயக்குநர் ரத்னகுமார் சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது, “29 படம் பற்றி பேசும்போதே என்னிடம் சொன்னார். டிசி படத்திற்காகவும் இன்டெர்வியூ கொடுக்கப்போவதில்லை, அல்லு அர்ஜுடன் பண்ணும் AA23 படத்திற்காகவும் இன்டெர்வியூ கொடுக்கப்போவதில்லை என்ற மனநிலையில் இருக்கிறேன் என என்னிடம் சொன்னார். அதற்கான உண்மையான விளக்கம் அவர்தான் சொல்லவேண்டும், எனக்கு தெரியாது. ஒருவேளை அல்லு அர்ஜுன் சாரின் AA23 திரைப்படத்தில் தீவிரமாக இருக்கவேண்டும் என்றும், எந்தவித தொந்தரவும் கமிட்மென்சும் இல்லாமல் என நினைத்ததனால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்” என அதில் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லையாம்… எப்போது தெரியுமா?
29 தி பிலிம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Its Time to Lead.
Hearty congratulations to Chief Minister of Tamilnadu C. Joseph Vijay sir @actorvijay. ♥️♥️
Team #29TheFilm pic.twitter.com/pB5D5JSYbK
— Rathna kumar (@MrRathna) May 10, 2026
இயக்குநர் ரத்னகுமார் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் AA23 படத்திற்காக தீவிரமான பணிகளில் இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் ராக்கா படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, AA23 படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.