என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!
Rajinikanth speech at Art Of Living International Center in Bengaluru viral on social media | பெங்களூரில் அமைந்துள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங்' சர்வதேச மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டார் வேல்யூ பற்றி பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அறிந்தவர்களுக்கு அவரின் ஆன்மீக பற்று குறித்தும் தெரியும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு முறையாவது இமையமலை செல்வதை வழக்கமாக வைத்து உள்ளார். மேலும் தான் கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளிலும் ஆன்மீகம் சார்ந்த கதைகளை அதிக அளவில் அவர் பேசியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வந்தாலும் தனது ஆன்மீக பயணத்தின் சில விசயங்களை தொடர்ந்து செய்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதில் ஒன்றுதான் இமையமலை பயணம். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஆர்ட்ஸ் ஆஃப் லிவிங் ஃபௌண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பெங்களூரில் அமைந்துள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தில் நடைபெற்ற, லிவிங் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் 45-வது ஆண்டு நிறைவு மற்றும் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தலைவர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.




ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்:
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது குருதேவ் தன்னை ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்தது குறித்து கூறினார். மேலும் இரண்டு நாட்களுக்கு அங்கு தங்கி இருக்க முடிவு செய்த நான் அந்த இடத்தின் அமைதி பிடித்துப்போக 15 நாட்கள் தங்கியதாக கூறினார். அப்படி தங்கி இருந்த ஒருநாள் குருதேவ் என்னை தன்னுடன் வருமாறு அழைத்தார். நான் அப்படி வந்தால் அவருக்கு தொந்தரவாக இருக்கும் மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள் அது உங்களை தொந்தரவு செய்யும் என்று வர மறுத்தேன்.
ஆனால் அவர் அப்படி எதுவும் நடக்காது என்று என்னை அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். உண்மையைச் சொல்லப்போனால், அங்கே இருந்தவர்களில் ஒருவர்கூட என்னைப் திரும்பிப் பார்க்கவில்லை. நானே கைகளை அசைத்து வணக்கம் கூறினேன். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அந்த நிகழ்வு ஒரு ஸ்டார்டம் என்ற எனது ஈகோவை உடைத்துவிட்டது. ஆன்மீகம் எவ்வளவு சிறந்தது என்பதையும் எனக்கு புரிய வைத்தது என்று தெரிவித்து இருதார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… சந்தானத்தின் லவ் பைட் படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் வைரலாகும் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு:
VIDEO | Recalling his earlier visit to the Art of Living, actor Rajinikanth (@rajinikanth) brought the house down with his humorous take, said, ‘nobody even looked at me’.#Rajinikanth pic.twitter.com/JPZGgxtLMv
— Press Trust of India (@PTI_News) May 12, 2026
Also Read… எத்தணை சிறப்பான ஒரு நடவடிக்கை இது… முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்!