சந்தானத்தின் லவ் பைட் படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு
Love Bite Movie Pooja Video: நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் லவ் பைட்ஸ். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது படத்தின் பூஜை வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் காமெடியனாக உச்சத்தில் கலக்கி வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் தற்போதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பல காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் சந்தானம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகன்களான ஆர்யா, ஜீவா மற்றும் சிம்புவின் நண்பர்களாக நடித்து கலக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக ஆர்யா மற்றும் ஜீவா உடன் நடித்தப் படங்கள் மக்களிடையே தற்போது வரை பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக நாயகனாக நடித்து வருகிறார்.
காமெடியனாக நடித்த போது சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றதோ அதைவிட அதிகமாக அவர் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் இறுதியாக வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ள படம் லவ் பைட்.




லவ் பைட் படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு:
இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்க உள்ள இந்த லவ் பைட் படத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிகர்கள் அபர்ணா தாஸ், ஆனந்த் ராஜ், விடிவி கணேஷ், ஆதித்யா கதிர், மொட்டை ராஜேந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது உயிரே உயிரே பாடல் வீடியோ
லவ் பைட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#LoveBite Pooja Ceremony ❤️
A blessed beginning to this bloody fun ride!!
▶️ https://t.co/QommzhoJjQ#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@iamsanthanam @selvinrajxavier @aparnaDasss #Anandraj… pic.twitter.com/QvMdZ1wwjf
— AGS Entertainment (@Ags_production) May 12, 2026
Also Read… கருப்பு படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு!