AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. கருப்பு படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

Director RJ Balaji: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு. இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள். இன்னும் இப்பட ட்ரெய்லர் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Karuppu: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. கருப்பு படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
சூர்யா மற்றும் த்ரிஷா கருப்பு படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 May 2026 20:05 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருப்பவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் 45வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கருப்பு (Karuppu). இந்த படமானது கிட்டத்தர ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் ஷூட்டிங் முடிவடைந்தது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா “சரவணன்” என்ற வழக்கறிஞராக நடித்துள்ளார், மேலும் திரிஷா “ப்ரீத்தி” என்ற வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படமானது நீதிக்கும், அநியாயத்துக்கு இடையே உள்ளே உள்ள கதையை மையமாக இயக்கப்பட்டுள்ளது.

இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான படமாக தயாராகியுள்ள நிலையில், 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் குறித்து, ஸ்பெஷல் போஸ்டரை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டி55 படக்குழு

கருப்பு திரைப்படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் ஆர்.ஜே.பாலாஜி, தெலுங்கானா மற்றும் கேரளா ரிலீஸ் உரிமை கைபற்றப்பட்டுவிட்டதாகவும், மேலும் உலகமெங்கும் கருப்பு படம் வெளியாகும் என்றும், விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என்றும் அதில் கூறியுள்ளார். இன்று 2026 மே 09ம் தேதியில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு பிரச்சனையில் ஜார்ஜ் குட்டி.. வெளியானது மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ பட அதிரடி ட்ரெய்லர்!

இன்னும் கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடவில்லை. இன்னும் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் குழப்பங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் கருப்பு பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிக்கவில்லை. இந்த பிரச்சனைகளின் முடிவிற்கு பிறகே ட்ரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. வரும் 2026 மே 10ம் தேதியில் ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us