Drishyam 3: மீண்டும் ஒரு பிரச்சனையில் ஜார்ஜ் குட்டி.. வெளியானது மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ பட அதிரடி ட்ரெய்லர்!
Drishyam 3 Trailer: மலையாளம் சினிமாவில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் த்ரிஷ்யம் 3. இதில் மோகன்லால், மீனா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில், வரும் 2026 மே 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மோலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் மோகன்லால் (Mohanlal). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 400-க்கும் மேல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தொடர்ச்சியான கதைக்களத்தில், ஒரு சீரிஸ் போல இவர் நடித்துவந்த திரைப்படம்தான் த்ரிஷ்யம் 3 (Drishyam 3). இந்த படமானது கடந்த 2013ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் 1 மற்றும் 2021ம் ஆண்டில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தின் தொடர்ச்சியாக ஒரு சீரிஸ் போலவே இந்த த்ரிஷ்யம் 3 படமும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு மனைவியாக நடிகை மீனா (Meena) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் அனிஷாப் ஹாசன் (Ansiba Hassan), எஸ்தர் அனில் (Esther Anil), ஆஷா ஷரத், சசிகுமார், முரளி கூப்பி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த த்ரிஷ்யம் 3 படமானது வரும் 2026 மே 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் இன்று 2026 மே 9ம் தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் மோகன்லாலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்… கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ!
நடிகர் மோகன்லால் பகிர்ந்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் குறித்த ட்ரெய்லர் பதிவு:
#Drishyam3 Official Trailerhttps://t.co/plnDy1AhAv pic.twitter.com/FDuLqGwrgg
— Mohanlal (@Mohanlal) May 9, 2026
த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
மோகன்லாலில் த்ரிஷ்யம் 3 படமானது வித்தியாசமான புதிய வழக்கில் தொடர்கிறது. போலீசிற்கும், மோகன்லாலின் குடும்பத்திற்கும் நடக்கும் மற்றொரு கதைக்களத்தில் தயாராகியுள்ளது. மோகன்லாலை ஜார்ஜ்குட்டியாக தனது குடும்பத்தை பாதுகாப்பதற்கு என்ன செய்கிறார் என்பதை பற்றிய திரில்லர் மற்றும் எதிர்பாராத டுவிஸ்ட்டில் இப்படம் தயாராகியிருப்பதாக ட்ரெய்லரில் தெரிகிறது.
மோகன்லாலின் நடிப்பில், 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த படங்களில் ஒன்றுதான் த்ரிஷ்யம் 3. இதை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்க, ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்துக்கு புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனில் ஜான்சன் இசையமைத்துள்ள நிலையில், குறைவான பாடல்களுடன் பல திரில்லர் காட்சிகளில் இப்படம் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழுவது இல்லை – தமன்னா பாட்டியா
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் தீவிரமாக நடைவுபெற்றுவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படமானது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படம் முதல் இரு பாகங்களை போலவே மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான த்ரிஷ்யம் 3 பட ட்ரெய்லர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.