AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்ட்

Drishyam 3 Movie Censor Update Here | நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் த்ரிஷ்யம் 3. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்ட்
த்ரிஷ்யம் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 May 2026 20:04 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் வெளியாகும் படன்ங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் மோகன்லால் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் முதல் படமாக நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியானது பேட்ரியாட் படம். இந்தப் படத்தின் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தது மோகன்லால் – மம்முட்டி கூட்டணி.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு அடுத்ததாக நடிகர் மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது த்ரிஷ்யம் 3 படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

த்ரிஷ்யம் 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்ட்:

அதன்படி இயக்குநர் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்து உள்ள இந்த த்ரிஷ்யம் 3 படம் வருகின்ற 21-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கி உள்ளது. அதன்படி அந்த சான்றிதழில் த்ரிஷ்யம் 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

Also Read… Janhvi Kapoor: எனக்கு குடிப்பழக்கம் இருந்தது.. ஆனால் நான் அடிமையாக இல்லை – ஜான்வி கபூர் ஓபன் டாக்!

த்ரிஷ்யம் 3 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இது நிஜமாவே பைக் ரேஸ் படம்தானா? ஓடிடியில் வெளியாகி உள்ள பைக்கர் படத்தின் விமர்சனம் இதோ

Follow Us