AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Janhvi Kapoor: எனக்கு குடிப்பழக்கம் இருந்தது.. ஆனால் நான் அடிமையாக இல்லை – ஜான்வி கபூர் ஓபன் டாக்!

Janhvi Kapoor About Alcohol Addiction Struggles: பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஜான்வி கபூர். இவர் சமீபத்தில் பேசியிருந்த பேட்டி ஒன்றில், தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதற்கான காரணம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தில் வைரலாக பரவிவருகிறது.

Janhvi Kapoor: எனக்கு குடிப்பழக்கம் இருந்தது.. ஆனால் நான் அடிமையாக இல்லை – ஜான்வி கபூர் ஓபன் டாக்!
ஜான்வி கபூர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 05 May 2026 20:48 PM IST

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இவருக்கு பிறகு இவரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் (Janhvi Kapoor) இருந்துவருகிறார். இவர் தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் லீட் கதாநாயகியாக படங்களில் நடித்துவருகிறார். தெலுங்கு சினிமாவில் ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்டிஆர் (Jr.NTR) போன்ற உச்ச நடிகர்களுக்கும் ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பில் தென்னிந்த்திய மொழியில், வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் பெடி (Peddi). இதில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி கபூர், தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதற்கான வேதனையான விஷயங்கள் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். இந்த விஷயம் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் – எஸ்.ஏ.சந்திரசேகர்!

குடிப்பழக்கம் இருந்தது குறித்து நடிகை ஜான்வி கபூர் பேசிய விஷயம்:

அந்த பேட்டியில் நடிகை ஜான்வி கபூர் பேசுகையில், “நான் குடிக்கு அடிமையாக இருந்தேன் என்றோ, அல்லது அதை தவறாக பயன்படுத்தேனேன் என்றோ சொல்லவே மாட்டேன். எப்போதாவது குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்துது. இது எனது வாழ்க்கையில் ஒரு வேதனையான அனுபவத்திற்கு பிறகு இது நடந்தது. எனக்கு எதாவது குடிக்கவேண்டும் என தோன்றியது. அதற்கு பிறகு நான் காலையில் எழுந்து இருக்கும்போது வரும் தலைவலி எனக்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: தளபதி விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ

என்னிடம் இருந்து ஒரு கெட்ட வாசனை என்னால் நுகரமுடிந்தது. எனது வாழ்க்கையில் குடிப்பழக்கத்தால் அவதிப்பட்ட ஒருவரிடம் இருந்து வந்த பரிட்சயமான வாசனையை போல இருந்தது. அந்த வாசனை இது ஒரு நல்ல நாள் இல்லை என்பதை போலவே, ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தும்” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார். தற்போது நடிகை ஜான்வி கபூர் பேசியது தொடர்பான விஷயங்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பேசப்பட்டுவருகிறது.

நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

நடிகை ஜான்வி கபூர், ராம் சரணுக்கு ஜோடியாக பெடி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், அதில் ஆச்சியம்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படம் ராம் சரணுக்கு, ஜான்வி கபூருக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us