AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SA Chandrasekhar: விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் – எஸ்.ஏ.சந்திரசேகர்!

S.A. Chandrasekhar Interview: நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் முன்னிலை வகித்துவருகிறார். அந்த வகையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் நிச்சயம் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் என நம்பிக்கை அளித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

SA Chandrasekhar: விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் – எஸ்.ஏ.சந்திரசேகர்!
தளபதி விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 May 2026 15:01 PM IST

தென்னிந்திய சினிமாவில், ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் இன்று 2026 மே 4ம் தேதியில் நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Elections) முடிவுகளில் அனைத்து பெரிய காட்சிகளை காட்டிலும், கணித்து நின்று முன்னிலை வகிக்கிறார். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு (TVK Party) வாழ்த்துக்கள் தெரிவித்து ஒட்டுமொத்த சினிமா அப்பிரபலன்களும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் பந்துகளை சிறப்பாக வெளியிட்டு வருகிறார்கள். இன்னும் வாக்குகள் என்னும் பணியானது நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக (ADMK) மற்றும் திமுக (DMK) போன்ற பெரிய காட்சிகளை காட்டிலும், விஜய்யின் தவெக கட்சியானது முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் இயக்குநரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் (S.A. Chandrasekhar) அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், விஜய் நிச்சயம் தமிழகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை செய்வார் என கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தளபதி விஜய் வீட்டிற்கு வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ

தவெக தலைவர் விஜய் குறித்து அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ பதிவு:

தவெக தலைவர் விஜய் முன்னிலை குறித்து பேட்டியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்:

அந்த பேட்டியில் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசுகையில், “விஜய்யை எப்போதும் ஊக்கப்படுத்துவேன். அவரும் ஒரு நடிகராக இல்லாமல் சமூகத்தின் மீது அக்கக்காய் உள்ளவராகவும் இருந்திருக்கிறர். அவரின் மனதிலும், இந்த சமூகத்திற்காக எதாவது செய்யவேண்டும் மற்றும் தமிழ் மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. மெதுவாக, அவர் இவற்றை வளர்த்தெடுத்தார். இன்று, அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் போகிறார். தமிழ் மக்கள் அவரை ஒரு தலைவராக மட்டுமல்லாமல், அவரை நேசித்தார்கள்.

இதையும் படிங்க: சொகுசு கார்கள்.. ரியல் எஸ்டேட் உட்பட.. தவெக தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணும் அவரைத் தன் சொந்த மகனாகக் கருதுகிறார்கள். இளைஞர்கள் அவரைத் தங்கள் அண்ணனாக கருதுகிறார்கள். எல்லோரும் அவரை அண்ணா என்று அழைக்கிறார்கள். வயதான பெண்கள் அவரைத் தங்கள் சொந்த மகனாகக் கருதுகிறார்கள். சில 60 வயதுப் பெண்கள் அவரைத் தங்கள் பேரனாகக் கருதுகிறார்கள். தனக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான அந்த உறவை அவர் வளர்த்துவந்தார். விஜய் நிச்சயம் தமிழகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை செய்வார் என அதில் அவர் பேசியிருந்தார் .

Follow Us