AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhyankkar: கருப்பு படம் நான்தான் பண்ணுறேனானு டவுட் இருந்தது.. அந்த தருணத்தை எனது வாழ்க்கையிலே மறக்க மாட்டேன் – சாய் அபயங்கர்!

Sai Abhyankkar About Karuppu Movie: தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் இசையமைப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் சாய் அபயங்கர். இவர் சூர்யாவின் கருப்பு படத்திற்கு இசையமைப்பாளராக பாடல்களை செய்திருக்கும் நிலையில், இப்படத்தில் அவர் முதல் முறையாக ஒப்பந்தமான தருணம் குறித்து விவரித்துள்ளார்.

Sai Abhyankkar: கருப்பு படம் நான்தான் பண்ணுறேனானு டவுட் இருந்தது.. அந்த தருணத்தை எனது வாழ்க்கையிலே மறக்க மாட்டேன் – சாய் அபயங்கர்!
சாய் அபயங்கர் மற்றும் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 May 2026 10:47 AM IST

இளம் இசையமைப்பாளராக ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையமைப்பில் தமிழில் டியூட் (Dude) என்ற படானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இப்படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. படத்தில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்திவந்தது. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக இவர் முதல் முறையாக அறிமுகமான பிக் ப்ராஜெக்ட் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதில் நடிகர் சூர்யா (Suriya) நாயகனாக நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணியாட்டியுள்ள நிலையில், பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக வந்துள்ளது.

அந்த வகையில் கருப்பு படத்தின் ஆடியோ லான்ச் (Karuppu Movie Audio Launch) சமீபத்தில் நடைபெற்றிருந்தது.அதில் பேசிய சாய் அபயங்கர், கருப்பு படத்தில் ஒப்பந்தமான தருணம் மற்றும் மறக்கமுடியாத நினைவுகள் குறித்து பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: விஜய் குறித்த தவறாக பேசிய நடிகர்.. AK64 படத்திலிருந்து விலக்கிய அஜித்?

கருப்பு திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கருப்பு திரைப்படத்தில் ஒப்பந்தமான தருணம் பற்றி சாய் அபயங்கர் பேச்சு:

அந்த நிகழ்ச்சியின்போது சாய் அபயங்கர் பேசுகையில், “கருப்பு படத்திற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அண்ணாவை சந்திப்பதற்காக காரில் போய்க்கொண்டுஇருந்தேன். அப்போது எனக்கு, கருப்பு படத்தில் நான்தான பன்னுறேனா என ஒரு டவுட் இருந்தது. ஒரு தகவலாக நான் கேட்டுவிட்டேன், ஆனால அதிகாரபூர்வமாக நான்தான் பண்ணுறேனான்னு எனக்கு தெரியாது. அந்த சமயத்தில் நான் காரில் சென்றுகொண்டிருந்தேன், அப்போதுதான் “சாய் அபயங்கர் ஆன் போர்ட் சூர்யா45” என டுவிட்டரில் வந்தது. அந்த தருணத்தை எனது வாழ்க்கையிலே மறக்கமாட்டேன்.

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!

ரொம்பவே ஹேப்பியாக இருந்தேன். இதற்கு முழுமையான காரணம் ஆர்.ஜே.பாலாஜி அண்ணாதான். இசையமைப்பாளராக ஒரு லிஸ்ட் இருக்கும், இந்த நடிகரின் படங்களில் ஸ்கோர் பண்ணிட்டா வெற்றியை பெற்றுவிடுவோம் என, அப்படி எனது லிஸ்டில் முதலில் இருந்தவர் சூர்யா சார்தான். நான் ஒரு பெரிய நட்சத்திரத்தின் படங்களுக்கு இசையமைப்பேன் என நினைக்கவில்லை, ஆனால் கருப்பு படத்திற்கு இசையமைத்தது பெரும் சாதனையாக உணர்கிறேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

Follow Us