AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhyankkar: கருப்பு பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப ஆச்சயரமாக இருந்தது – சாய் அபயங்கர் பேச்சு!

Sai Abhyankkar About Karuppu Movie Opportunity: தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் சென்சேஷன் இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர். இவர் சூர்யாவின் கருப்பு படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பு வாய்ப்பு கிடைத்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sai Abhyankkar: கருப்பு பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப ஆச்சயரமாக இருந்தது – சாய் அபயங்கர் பேச்சு!
சாய் அபயங்கர் மற்றும் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Apr 2026 17:12 PM IST

இளம் இசையமைப்பாளராக ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் தமிழில் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) பென்ஸ் (Benz) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், இவரின் இசையில் முதல் முதலில் வெளியான திரைப்படம் டியூட் (Dude). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டியூட் படத்தின் ஒட்டுமொத்த ஆல்பமும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து அடுத்தடுத்த புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஏன் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் அட்லீயின் (Atlee) கூட்டணியில் உருவாகிவரும் ராக்கா (Raaka) என்ற படத்திற்கும் இவரே இசையமைக்கிறார்.

அந்த வகையில் தமிழில் இவர் இசையமைத்துவந்த பிரம்மாண்ட படம்தான் கருப்பு (Karuppu). சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர், சூர்யாவின் கருப்பு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: ராக்கா படத்தின் இசையில் அட்லி அண்ணா தெளிவாக இருந்தார் – இசையமைப்பாளர் சாய் அபயங்கர்

கருப்பு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து சாய் அபயங்கர் பேச்சு:

அந்த நேர்காணலில் அவர் பேசுகையில், “கருப்பு படத்தின் இசையமைப்பு வாய்ப்பு கிடைத்தது, உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஏன் விலகினார் என்பது பற்றி தெளிவான விஷயங்கள் எனக்கு தெரியாது. நான் அவரிடம் பேசினேன், இப்படத்தில் நான் இசையமைப்பதை அவர் ஆதரித்தார். இந்த கருப்பு படமானது ஈர்ப்பையும், ஆன்மீகத்தின் சாயல் கலந்த, ஒரு அபாயகரமான ஆற்றலை கொண்ட திரைப்படம்.

இதையும் படிங்க: கேஜிஎஃப் பார்ட் 3 உருவாகுமா? ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன யாஷ்!

இப்படத்தின் பின்னணி இசை பணிகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இப்பொது நாங்கள் இசைவெளியீட்டு விழாவிற்காக தயாராகிவருகிறோம். வெகுவிரைல் இசைவெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்படும்” என அதில் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு:

இந்த கருப்பு படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை திரிஷா, ஷிவதா, அனகா, ஸ்வாசிகா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படம் வரும் 2026 மே 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது இந்த 2026ம் ஆண்டில் சூர்யாவிற்கு வெற்றி திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது.

Follow Us