ராக்கா படத்தின் இசையில் அட்லி அண்ணா தெளிவாக இருந்தார் – இசையமைப்பாளர் சாய் அபயங்கர்
Music Director Sai Abhyankar: தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக இருக்கு சாய் அபயங்கர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாக உள்ள படம் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் அட்லி. இவரது இயக்கத்தில் இதுவரை திரையரங்குகளில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்த அட்லி இந்தி சினிமாவில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்தி திரையுலகினர் திரும்பிப் பார்க்கும் வகையில் படம் வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கானிற்கு இந்தப் படம் தான் முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அட்லி படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் அட்லி அடுத்தாக ராக்கா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்சன் பாணியில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் அட்லி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ராக்கா படத்தின் இசையில் அட்லி அண்ணா தெளிவாக இருந்தார்:
ராக்கா படத்திற்காக முதல் நாளில் நான் அட்லீ அண்ணாவைச் சந்தித்தபோது, அந்தத் தனித்துவமான பின்னணி இசையை (soundtrack) தான் எவ்வாறு உருவாக்கப்போகிறார் என்பது குறித்த தெளிவான சிந்தனை அவரிடம் இருந்தது. நாங்கள் இணைந்து பல பாடல்களை உருவாக்கினோம்; அவை அனைத்தும் மிகச் சிறப்பாகவும் அமைந்தன. அல்லு அர்ஜுன் சாருக்கு இசையின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்தப் படைப்பு சர்வதேச அளவில் சென்றடைய வேண்டும் என்றும், சர்வதேசப் பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அட்லீ அண்ணா கதையை விவரித்து முடித்த பிறகு, இந்த இசைத் தொகுப்பை நான் எவ்வாறு வடிவமைத்து வழங்கப்போகிறேன் என்பது குறித்த எண்ணங்கள் என்னுள் ஆழமாகத் தூண்டப்பட்டன என்றும் சாய் அபயங்கர் தெரிவித்து இருந்தார்.
Also Read… பூஜைகளுடன் தொடங்கியது விஜய் தேவரகொண்டாவின் புது பட ஷூட்டிங் – வீடியோ இதோ!
இணையத்தில் வைரலாகும் சாய் அபயங்கர் பேச்சு:
#SaiAbhyankkar in Today’s interview:
“When I met #Atlee anna on Day-1 for #Raaka, he had idea of how he gonna produce the peculiar soundtrack🤞. We have cooked many songs & it came out really well🔥. #AlluArjun sir loves music, We wish it’ll go international & collaborating with… pic.twitter.com/opeti01H6x
— AmuthaBharathi (@CinemaWithAB) April 20, 2026