பிக்பாஸில் அஸ்மிதா – ஜேசனுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிபி திருந்துங்கடா அகடமி என்ற டாஸ்க் வழங்கப்பட்டு நடைப்பெற்று வருகின்றது. இந்த டாஸ்கில் அஷ்மிதா மற்றும் ஜேசன் இருவருக்கும் சீக்ரெட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் சில நிகழ்ச்சிகளும் உள்ளது. அதன்படி சின்னத்திரையில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது 10-வது சீசன் (Bigg Boss Tamil Season 10) வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ரசிகர்களிடையே வரவேற்பும் அதிகரித்து உள்ளது. அதன்படி இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது மட்டும் இன்றி தினம் தினம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு புதுப் புது டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 8 வாரங்கள் முடிவடைந்து தற்போது 9-வது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ந்து இந்த வார டாஸ்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




பிக்பாஸில் அஸ்மிதா – ஜேசனுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்:
அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 9-வது வாரம் பிபி திருந்துங்கடா அகடமி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் முதியோர் கல்வி கற்பது போலவும் சில போட்டியாளர்கள் அந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த டாஸ்கிலேயே பிக்பாஸ் போட்டியாளர்களில் இரண்டு பேருக்கு சீக்ரெட் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜேசன் மற்றும் அஸ்மிதா இருவரும் இணைந்து சீரியல் கில்லர்களாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தர்மன் படத்தின் இயக்குநர் அஸ்வத் ரிலீஸ் குறித்து என்ன சொல்லி இருக்கார் தெரியுமா? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day59 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/zzg5XqzNSl
— Vijay Television (@vijaytelevision) November 4, 2026
Also Read… சாப்பாட்டுக்கு அளவு முக்கியம்.. பிக் பாஸில் சாப்பாட்டுக்காக மீண்டும் எழுந்த பிரச்சனை – ப்ரோமோ இதோ!