AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் பட விழாவில் நடிகர் தனுஷிற்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா – வைரலாகும் வீடியோ!

Actor Suriya special thanks to Actor Dhanush | தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யாவின் சீன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது.

சீன் பட விழாவில் நடிகர் தனுஷிற்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா – வைரலாகும் வீடியோ!
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Nov 2026 11:28 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் ஒவ்வொரு மொழியிலும் அந்த ஊர்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகளைகளை முன்னிட்டு திரையரங்குகளில் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது மேலும் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த தீபாவளி 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் சீன் படம் (Scene Movie) மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 என இரண்டு பெரிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சீன் படத்தின் இசை வெளியீட்டு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து உள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீன் பட விழாவில் நடிகர் தனுஷிற்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா:

அதன்படி நடிகர் சூர்யா பேசியதாவது, ராமாயணம் (Ramayana) மற்றும் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) ஆகிய படங்கள் ஒன்றாக வருகின்றன. இதற்கான காட்சிகளும் இடம்பெறுகின்றன. எங்கள் படம் வெளியாவதற்கு ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி. மேலும் நடிகர் தனுஷுக்குச் சிறப்பான நன்றிகள். எனது படம் சீன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருவதால், அவர் தனது ஓம் (Om) படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைப்பதாக ட்வீட் செய்திருந்தார். அதற்காக அவருக்கு மிக்க நன்றி என்று சூர்யா தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் புது புது டாஸ்குகளை களமிறக்கும் டீம்… வெற்றியை நோக்கி விளையாடும் போட்டியாளர்கள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ் சினிமாஸ் – அப்டேட் இதோ

Follow Us