Jason Sanjay: அப்பா முதல்வராக மேடையில்.. என்னை பற்றிவரும் மீம்ஸ் எல்லாம் பார்ப்பேன் – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
Jason Sanjay About Criticism And Memes: தமிழில் மக்கள் மத்தியில் இளம் இயக்குநராக பிரபலமானவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் தமிழில் சிக்மா என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர், தன்னை பற்றிவரும் மீம்ஸ் மற்றும் தனது தந்தை விஜய் குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் இளம் இயக்குநராக சினிமாவில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவரின் இயக்கத்தில் தமிழில் முதல் திரைப்படமாக அமைந்தது சிக்மா (Sigma Movie). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க, ஹீரோவாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) நடித்திருந்தார். இந்த திரைப்படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், ஓரளவு திரையரங்குகளில் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு பிறகு ஜேசன் சஞ்சய் ஹீரோவாக படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவருகிறது.
ஆனால் அது குறித்து எந்தவித அறிவிப்புகளும் இன்றுவரையில் வெளியாகவில்லை. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஜேசன் சஞ்சய், தன்னை பற்றிவரும் மீம்ஸ் மற்றும் தனது தந்தை முதல்வர் விஜய் (CM Vijay) குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: தெய்வீக ஆல்பம்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முழு பாடல் தொகுப்பு வெளியீடு!
சிக்மா திரைப்படம் குறித்து ஜேசன் சஞ்சய் பகிர்ந்த பதிவு:
Thank you so much for your incredibly encouraging words, sir. They truly mean a lot to me and give me even more strength and motivation to push myself and do better with every opportunity. It means more than I can express. Love you, sir. ❤️
— Jason Sanjay Official (@official_jsj) October 1, 2026
தன்னை பற்றிவரும் மீம்ஸ் குறித்து ஓபனாக பகிர்ந்த ஜேசன் சஞ்சய்:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ஜேசன் சஞ்சய் அதில், “என்னைப் பற்றி இணையத்தில் பரவும் நியூஸ் எல்லாமே பார்ப்பேன். என்னை பற்றி மீம்ஸ் வந்தாலும் பார்ப்பேன். அதை எனது நண்பர்கள் குரூப்பில் பகிர்ந்து நானே அதற்கு ரியாக்ட் செய்வேன். நிறைய மக்களுக்கு என்னைப் பற்றி முழுவதுமாக எதுவும் தெரியதல்லவா. மேலும் எனது தந்தை படங்கள் மற்றும் அரசியல் குறித்தும் விமர்சனங்கள் வரும். அந்த விமர்சனங்களிலிருந்து நான் எப்போதும் தள்ளி இருக்கவே விரும்புவேன்.
இதையும் படிங்க: அது நானே எடுத்த முடிவு.. மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக தனது அர்ப்பணிப்பு குறித்து பேசிய ரெஜினா கசாண்ட்ரா!
அது எல்லாமே மற்றவர்களின் குமுறல். எனது தந்தையின் அந்த பதவி என்னை மேலும் பரிவுள்ளவனாக ஆக்குகிறது. மேலும் எனது குடும்பத்தையும் அதை படகுக்காக்கவும் நான் பல விஷயங்களை செய்கிறேன். நான் எதாவது செய்ய நினைத்து அது எதுவும் பெரிதாகிவிடக்கூடாது, ஏனென்றால் எனது அப்பா முதல்வராக மேடையில் இருக்கிறார். நான் எனது படங்கள் மூலமாகவே நான் எப்படிப்பட்டவன் என காட்டவேண்டும் என விரும்புகிறேன். மேலும் எனது தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க விரும்புவதில்லை” என அதில் அவர் கூறியுள்ளார்.