கேள்வி கேட்டல் மட்டும் அப்டியா? முனியம்மாளை வெச்சி செய்த விஜய் சேதுபதி – வைரலாகும் ப்ரோமோ!
Vijay Sethupathi Bigg Boss Promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக 55 நாட்களை கடந்துள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் விஜய் சேதுபதி ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், முனியம்மாளின் நகைச்சுவைத்தனம் மற்றும் அவரின் கேள்விகள் குறித்து காமெடி செய்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிற்து.
தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டுவரும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026 செப்டம்பர் தொடக்கம் முதல் ஆரம்பமான நிலையில், இன்றுடன் (31/10/2026) 55 நாட்களாகியுள்ளது. கடந்த வாரத்தில் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) குரலில் பிரச்சனை என்ற காரணத்தினால் அவர் தொகுப்பாளராக தொகுக்கவில்லை. அவருக்கு பதிலாக நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக தொகுத்து வழங்கியிருந்தார். அவர் அந்த நிகழ்ச்சியை தொகுக்கும்போது ஜேசன் அவரிடம் மரியாதையை இல்லாமல் பேசியது தொடர்பான விஷயங்களும் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கு விஜய் சேதுபதி ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், கடந்த 2 வாரங்களில் நடந்தை பற்றி கேள்விகள் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த விதத்தில் இந்த வாரத்தில் வந்த முதலிலே முனியம்மாளிடம் நகைச்சுவை செய்வதுபோல ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் முனியம்மாள் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: அதே குரலோடு திரும்பி வந்துட்டே-னு சொல்லு.. பிக் பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.. போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
முனியம்மாளை காமடி செய்த விஜய் சேதுபதி:
இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபத்தில், முனியம்மாளிடம் கேள்வி கேட்பதுபோல இருக்கிறது. அவரிடம் விஜய் சேதுபத்தில், லக்ஸூரி பட்ஜெட் டாஸ்கில் நீங்கள் என பங்கேற்கவில்லை என கேட்டார். அதற்கு முனியம்மாள் இனிமேல் பங்கேற்பேன் என்றும், தனக்கு உடனே ஆங்கிலம் வாசிக்கவும், எழுத தெரியாது என்றும் கூறியிருந்தார். உடனே விஜய் சேதுபதி, அப்போது நீங்கள் சாப்பாட்டிலும், சரி மற்றவர்கள் வாங்கும் பொருட்களையும் குறை கூற கூடாது இல்லையா.
இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் முக்கிய வேடத்தில் இணையும் பிரபலம்.. அட இந்த நடிகரா?
நீங்கள் கொஞ்சமாவது முயற்சி செய்திருக்கலாம் அதற்காக என்றும் கூறியிருந்தார். உடனே முனியம்மாள் எதுவும் தெரியாத குழந்தையை போல முழிக்கிறார். உடனே விஜய் சேதுபதி, மற்றபடி உங்களுக்கு குதூகலமாக இருக்கிறது, குஷியாக இருக்கிறது. ஆனால் கேள்வி கேட்டால் மட்டும் கோபமாக இருக்கிறதா? நீங்க யாருனு தெரியும் முனியம்மாள் என அதில் அவர் கூறியிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 55வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day55 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/xYXifOmE0Q
— Vijay Television (@vijaytelevision) October 31, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 8வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் ஒரு எவிக்ஷன் இருக்கும் நிலையில், எந்த போட்டியாளர் வெளியேறுவார் என இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த வாரத்தில் நோ எவிக்ஷன் இருக்கலாம் என கூறப்படுகிறது.