AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரக்கன்-னு பெரு வெச்சிட்டு கிறுக்கு மாறி பண்ற… பிக் பாஸில் அவினாஷ் – டிடிஃஎப் வாசன் இடையே வெடித்த மோதல்!

TTF Vasan & Avinash Fight: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் நிலையில், இந்த வாரத்திற்கான ஓர்ஸ்ட் பர்ஃபாமராக தன்யா மற்றும் கரீஷ்மா இருவருமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டிடிஃஎப் வாசன் சாதாரண உதவி செய்த நிலையில், அது அவினாஷிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோபத்தினால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அரக்கன்-னு பெரு வெச்சிட்டு கிறுக்கு மாறி பண்ற… பிக் பாஸில் அவினாஷ் – டிடிஃஎப் வாசன் இடையே வெடித்த மோதல்!
டிடிஎஃப் வாசன் மற்றும் அவினாஷ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2026 16:32 PM IST

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10 Show) நிகழ்ச்சியானது சிறப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியில் வாரம் வாரம் புது புது டீம் டாஸ்குகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 8வது வாரத்தின் தொடக்கத்திலே கவ்பாய்ஸ் – மாஃபியாஸ் என்ற டாஸ்கானது சிறப்பாக நடைபெற்றுவந்தது. அந்த விதத்தில் இந்த டாஸ்கானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இந்த வாரத்தில் டாஸ்கில் மற்றும் பிக் பாஸ் வீட்டில் சரியாக பங்கேற்றுக்கொள்ளாத போட்டியாளர்களை சிறையில் அடைப்பது வழக்கம். அதுபோல இந்த வாரத்தில் தன்யா மற்றும் கரீஷ்மா இருவருமே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அந்த விதத்தில் டிடிஃஎப் வாசன் (TTF Vasan) அவர்களுக்கு, பெட் ஷீட்டை எடுத்து கொடுத்திருந்தார். இதனால் அவினாஷ் (Avinash Ashok) மற்றும் டிடிஃஎப் வாசன் என இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டாஸ்கின்போது பேனிக்-ஆன அக்ஷிதா.. பிக் பாஸில் பரபரப்பு – வைரலாகும் ப்ரோமோ!

ஹெல்ப் செய்த டிடிஃஎப் வாசனால் அவினாஷ் கோபம்:

இந்த வாரத்திற்கான ஓர்ஸ்ட் பர்ஃபாமராக தன்யா மற்றும் க்ரீஷ்மா இருவருமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்ட் விதத்தில் அவர்களுக்கு சாதாரணமாக டிடிஃஎப் வாசன் பெட் ஷீட்டை எடுத்துக்கொடுத்திருந்தார். இதனால் கோபமான அவினாஷ், உடனே சிறையின் சாவியை டிடிஃஎப் வாசனிடம் தூக்கி எரிந்து என்னமோ பானு என்பதுபோல கூறினார்.

இதையும் படிங்க: இங்க சாப்பாட்டுக்குத்தான் சண்டையே… பிக் பாஸில் மோதலில் ஈடுபட்ட முகேஷ் – ஜேசன்!

உடனே டிடிஃஎப் வாசன் சிறையை திறந்த நிலையில், அவினாஷ் கோபத்தில், சாவியை தா என் சண்டை இடுவதுபோல பேச தொடங்கியுள்ளனர். இதனால் அவினாஷ் கோபத்தின் உச்சத்தில் இருந்த நிலையில், மற்ற போட்டியாளர்கள் சண்டையை தவிர்க்கும் விதத்தில் பிரித்துள்ளனர். மேலும் இதன் பிறகு டிடிஃஎப் வாசன், அவினாஷிடம் அட்வைஸாக பேசுவதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 54வது நாளின் 3வது ப்ரோமோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இந்த வாரம் முழுக்க கவ்பாய்ஸ் மற்றும் மாஃபியாஸ் டாஸ்கில் பல் சண்டைகள், பிரச்சனைகள் என சிறப்பாகவே சென்றது. மேலும் 8வது வாரத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சியானது இருக்கும் நிலையில், இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். அந்த விதத்தில் எந்த போட்டியாளர் இந்த வாரத்தில் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us