AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இங்க சாப்பாட்டுக்குத்தான் சண்டையே… பிக் பாஸில் மோதலில் ஈடுபட்ட முகேஷ் – ஜேசன்!

Jason And Mukesh Fight: தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் நிலையில், இந்த வாரத்தில் டாஸ்குகள் எல்லாமே தீவிரமாக நடைபெற்றிருந்தது. அந்த விதத்தில் இன்று (30/10/2026) வெளியான 2வது ப்ரோமோவில் முகேஷ் மற்றும் ஜேசன் இருவரிடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக பார்க்கலாம்.

இங்க சாப்பாட்டுக்குத்தான் சண்டையே… பிக் பாஸில் மோதலில் ஈடுபட்ட முகேஷ் – ஜேசன்!
பிக் பாஸ் 10 தமிழ் ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2026 13:12 PM IST

பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது இதுவரை வெளியான மற்ற சீசன்களை போல இல்லாமல், இந்நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், இன்றுடன் (30/10/2026) கிட்டத்தட்ட 54 நாட்களை கடந்துள்ளது. இந்த வாரத்தில் இந்நிகழ்ச்சியில் கவ்பாய்ஸ் – மாஃபியாஸ் டாஸ்கானது (Cowboys – Mafias task) சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த டாஸ்கில் தொடர்ந்து கவ்பாய்ஸ் டீம் முன்னிலை வகிக்கிறது. அந்த விதத்தில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அக்ஷிதா டாக்ஸ்கின்போது பேனிக்-ஆனது குறித்து வெளியாகியிருந்தது.

அதை தொடர்ந்து வெளியான 2வது ப்ரோமோவில் கவ்பாய்ஸ் டீமில் உள்ள போட்டியாளர்கள் அவினாஷ் மற்றும் முகேஷ் இருவருமே, மாஃபியாஸ் டீம் வைத்திருந்த கிச்சன் பொருட்களை உள்ளே எடுத்துச்செல்வது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் ஜேசன் மற்றும் முகேஷ் இருவரிடையே மோதல் ஏற்படுவதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யாருப்பா டிராக்டர்… ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் இயக்குநர் இவரா?

டாக்ஸ்க்கில் மோதிக்கொள்ளும் முகேஷ் மற்றும் ஜேசன்:

இந்த கவ்பாய்ஸ் – மாஃபியாஸ் டாஸ்கில் தொடர்ந்து கவ்பாய்ஸ் டீம் முன்னிலை வகிக்கிறது. அதனால் பிக் பாஸ் வீட்டில் பல ஆக்ஸஸ் அவர்களுக்கே இருக்கிறது. இந்நிலையில் கிச்சன் முழுக்க கவ்பாய்ஸ் டீமிடம் இருக்கும் நிலையில், மாஃபியாஸ் டீம் அவர்களுக்கான சாப்பாட்டை வெளியே வைத்தே சமைக்கிறார்கள்.

இதையும் படிங்க: டாஸ்கின்போது பேனிக்-ஆன அக்ஷிதா.. பிக் பாஸில் பரபரப்பு – வைரலாகும் ப்ரோமோ!

அந்த விதத்தில், அவர்கள் வைத்திருந்த இண்டக்ஷன் ஸ்டவ்-வை முகேஷ் மற்றும் அவினாஷ் இருவருமே உள்ளே தூக்கிக்கொண்டு போவதுபோல காட்டப்பட்டுள்ளது. முனியம்மாள் எந்தவித அனுமதி இல்லாமல் பெட் ரூமுக்கு சென்ற நிலையில், அவினாஷ் மற்றும் முகேஷ் இதை செய்துள்ளனர். இந்நிலையில் உடனே கொந்தளித்த ஜேசன், முகேஷிடம் மோதுவதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 54வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது விறுவிறுப்பு, சண்டைகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு சிறப்பாக ஒளிபரப்பாகிவந்தது. மேலும் கவ்பாய்ஸ் மற்றும் மாஃபியாஸ் டாஸ்கானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், கவ்பாய்ஸ் டீம் லீடிங்கில் உள்ளது. மேலும் இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ள நிலையில், டபுள் எவிக்ஷன் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

Follow Us