தி ஒன் ஆன் டியூட்டி… சூர்யாவின் சீன் படத்தின் ஆடியோ & ட்ரெய்லர் லான்ச் எப்போது? வெளியான அப்டேட்!
Scene Movie Trailer & Audio Launch: 2026ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் 3வது வெளியாக காத்திருக்கும் புத்தம் புதிய திரைப்படம்தான் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் 2026 நவம்பர் 6ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவே இந்த 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்த்துவரும் திரைப்படம்தான் சீன் (Scene Movie). இந்த திரைப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்க, சூர்யா (Suriya) லீட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்க, இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் மெயின் வில்லனாக மலையாள நடிகர் நஸ்லேன் நடித்துள்ளார். இந்த படம் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: பிக்பாஸில் ஜேசனிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட தன்யா… வைரலாகும் வீடியோ!
சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது:
இந்த சீன் திரைப்படமானது க்ரைம் திரில்லர் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக பல ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ளார். இந்த படம் விறுவிறுப்பாகி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: என்ன சொல்வதென்றே தெரியல.. பெடி பட தனது கதாபாத்திரத்தின் மீது எழுந்த விமர்சனம் குறித்து ஜான்வி கபூர் ஓபன்!
இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா வரும் 2026ம் அக்டோபர் 31ம் தேதியில், சென்னை உள்ள சாய் ராம் கல்லூரியில் மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் சீன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு:
The ONE duty for Anbaana fans – let’s create a #SCENE !💥
SCENE Audio & Trailer Launch at @SairamInstitute on 31st October 2026, from 5 PM onwards.
Worldwide In cinemas from November 6! #DiwaliRelease 🧨
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @SonyMusicSouth @prosathish @Linqmarqet @actcevents
— Zhagaram Studios (@ZhagaramOffl) October 29, 2026
சூர்யாவின் சீன் திரைப்படமானது மக்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் நஸ்ரியா நாயகியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவர் இப்படத்தின் மூலம் தமிழில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், சூர்யாவுக்கு இந்த சீன் திரைப்படமானது நிச்சயம் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.