AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene Movie: அடி எரோபிளேன போல… சூர்யா – நஸ்ரியாவின் சீன் படத்தின் 2வது பாடல் வெளியீடு!

Aeroplane Song: தென்னிந்திய சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் அதிகம் பிரபலமாகி மற்றும் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த நடிகர்தான் சூர்யா. இவரின் நடிப்பில் இந்த ஆண்டில் 3வது வெளியாக காத்திருக்கும் படம் சீன். தற்போது இப்படத்திலிருந்து 2வது பாடல் வெளியாகியுள்ளது.

Scene Movie: அடி எரோபிளேன போல… சூர்யா – நஸ்ரியாவின் சீன் படத்தின் 2வது பாடல் வெளியீடு!
சீன் திரைப்படத்தின் ஏரோபிளேன் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2026 18:07 PM IST

மலையாளம் சினிமாவில் ஆவேசம் (Aavesham) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக மக்களிடையே பேமசானவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இவரின் இயக்கத்தில் தமிழ் நடிகர் சூர்யா (Suriya) ஒப்பந்தமாகி நடித்துவந்த திரைப்படம்தான் சீன் (Scene). இப்படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், சூர்யா47 என தற்காலிகமாக அழைக்கப்பட்டுவந்தது. இதன் பின் இப்படத்திற்கு சீன் என படக்குழு டைட்டிலை வைத்திருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யா மற்றும் நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) இணைந்து நடித்துள்ளனர். இந்த ஜோடியானது முதல் முறையாக இந்த படத்தின் மூலமாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மலையாள பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு இதன் 2வது சிங்கிள் “ஏரோபிளேன்” (Aeroplane) என்ற பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படத்தின் பாடல் வரிகளை ராஜ்பிரியன் எழுத, கானா பாலா இப்பாடலை பாடியிருக்கிறார். தற்போது வெளியான இந்த பாடலானது இணையத்தில் வைரலாகிவருகிறது

இதையும் படிங்க: டோரதி படத்தின் 25வது நாள்.. இன்ட்ரவல் சண்டை மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஏரோபிளேன் பாடல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த சீன் திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருக்கிறார். இதில் சூர்யா இன்பராஜ் என்ற புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவருக்கு உதவும் பெண்ணாக நஸ்ரியா நடித்திருக்கிறாராம். மேலும் இப்படத்தின் மெயின் வில்லனாக இளம் நடிகர் நஸ்லென் “ஈஸ்வரன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் இந்த படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிப்பு அரக்கி என்றால் அந்த நடிகைகள்தான் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

இந்நிலையில் இப்படத்திற்கு யு/ஏ தர சென்சார் சான்றிதழ் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. 16 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகள் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில் இசைவெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் 2026ம் ஆண்டு அக்டோபர் 25 அல்லது 26ம் தேதிக்குள் வெளியாகும் என வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us