Dorothy : டோரதி படத்தின் 25வது நாள்.. இன்ட்ரவல் சண்டை மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!
Dorothy Making Video: தென்னிந்திய சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் டோரதி. இந்த படமானது வெளியாகி இன்றுடன் (19/10/2026) 25 நாட்களாகின்றது. அந்த விதத்தில் இப்படத்தின் இன்ட்ரவல் சண்டை காட்சியின் BTS வீடியோவை கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பேமஸான இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் இதுவரை மொத்தம் 10 திரைப்படங்களானது வெளியாகியிருக்கிறது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டோரதி (Dorothy). இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), ரிஷிகாந்த் (Rishikanth) மற்றும் சனந்த் (Sananth) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
ஒரு திருநங்கையின் வாழ்க்கை மற்றும் சிறுவயது நட்பு குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது வெளியாகி இன்றுடன் (19/10/2026) 25 நாட்களை கடந்துள்ளது. அதை முன்னிட்டு, டோரதி படத்தின் இன்ட்ரவல் காட்சியின்போது இருக்கும் சண்டை காட்சியில் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு – வைரலாகும் வீடியோ
கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த டோரதி படத்தின் இன்ட்ரவல் சண்டை காட்சி மேக்கிங் வீடியோ பதிவு:
Here’s the making of …
‘The Red Sand’#Dorothy 25th Day Special 🙏🏻❤️
Running Successfully in Theatres…
#Dorothy25thDay
#DorothyWinsBIG
#DorothyTheCinemaTheChange https://t.co/ZduB4dAOds— karthik subbaraj (@karthiksubbaraj) October 19, 2026
டோரதி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது இருக்கும்:
இந்த டோரதி திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த நிலையில், அவரின் 10வது திரைப்படமாக வெளியாகியது. இந்த படத்தில் சனந்த், கீர்த்தி சுரேஷ் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது சிறுவயது நண்பர்கள் மற்றும் ஒரு திருநங்கையின் வாழ்க்கை மற்றும் அவர்களின் காதல் போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நடிப்பு அரக்கி என்றால் அந்த நடிகைகள்தான் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது கைப்பற்றியிருந்தது. அந்த விதத்தில் இந்த படமானது வரும் அக்டோபர் 23ம் தேதியில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படமானது ஓடிடியிலும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.