AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Karthik Subbaraj: டோரதி படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி-யின் தவறான கருத்து.. வன்மையாக கண்டித்த கார்த்திக் சுப்பராஜ்!

Karthik Subbaraj Slams Mohan G: தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் டோரதி. இப்படம் மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து இயக்குநர் மோகன் ஜி எதிரான கருத்துக்களை பரப்பிவரும் நிலையில், அதை கண்டித்து கார்த்திக் சுப்பராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Karthik Subbaraj: டோரதி படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி-யின் தவறான கருத்து.. வன்மையாக கண்டித்த கார்த்திக் சுப்பராஜ்!
மோகன் ஜி மற்றும் கார்த்திக் சுப்பராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2026 21:16 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக இருந்தவருபவர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj). இவரின் இயக்கத்தில் தமிழில் சூர்யா முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டோரதி (Dorothy). இந்த படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் (Rishikanth), கீர்த்தி சுரேஷ் மற்றும் சனந்த் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது ஒரு திருநங்கையின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், அதன் பிறகு பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இப்படத்தை பார்த்து வாழ்த்தியிருந்தனர்.

இந்த படமானது எதிர்பார்த்திருந்த வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படம் மட்டும் திருநங்கைகளின் காதல் வாழ்க்கை குறித்து இயக்குநர் மோகன் ஜி (Mohan G) என்பவர் இழிவாக பேசியியுள்ளார். இதை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவரை கண்டித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா? கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்!

இயக்குநர் மோகன் ஜி-யை கண்டித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் வீடியோ பதிவு:

இந்த வீடியோவில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், டோரதி படமானது நல்ல வெற்றியை கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்களாகவுள்ளது, நனையும் பல திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்த படத்தின் ரிலீசிற்கு முன்னும், பின்னும் இப்படம் குறித்து தவறாக ஹெட்டர்ஸ்கள் தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு திருநங்கைகளின் கதையை வெற்றியடையக்கூடாது என தீவிரமாக இருந்தனர்.

இதையும் படிங்க: நட்பின் பிரிவா? சாதிகா மற்றும் முகேஷ் இடையே ஏற்பட்ட சங்கடம் – வைரலாகும் ப்ரோமோ!

சமீபத்தில் வீடியோ ஒன்றை பார்த்தேன், எனது குழுவினர்கள் என்னிடம் காண்பித்தார்கள். அதில் இயக்குநர் மோகன் ஜி என்பவர் ஒரு வீடியோவில் திருநங்கைகள் குறித்து பேசியிருந்தார். இந்த படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, திருநங்கை அக்கா ஒருவரிடம் பேசியிருந்தார். அப்போது அந்த திருநங்கையிடம், இந்த படத்தை பற்றி நிறையா சொல்லுகிறார் அது எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் அவர் அந்த திருநங்கை அக்காவிடம் கேள்வி கேட்கிறாரே, நீங்கள் திருமணமான பிறகு என்ன பண்ணுவீங்க. அதற்ககு தகுந்த பதிலை அந்த திருநங்கை அக்காவும் சொல்கிறார். ஆனால் இவர் திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்கிறார். எனக்கு எனது படத்தை பற்றி அவர் எவ்வளவு பேசியிருந்தாலும் கவலை இல்லை. ஆனால் அதில் மோகன் ஜி திருநங்கைகள் திருமண வாழ்க்கைக்கு குறித்து தவறாக பேசியிருந்த நிலையில், அதை கண்டித்து இந்த வீடியோவில் பேசியுள்ளார். இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us