Dorothy: பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்… டோரதி படம் குறித்து பாராட்டிய பேசிய நடிகர் சூர்யா!
Suriya Praises Dorothy Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்த துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் டோரதி படமானது வெளியான நிலையில், அதை பாராட்டி பேசியுள்ளார்.
கோலிவுட் வட்டாரங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களால் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி காத்திருக்கும் திரைப்படம்தான் சீன் (Scene). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள நிலையில், சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளது. அந்த விதத்தில் தொடர்ந்து மற்ற இயக்குநர்கள் மற்றும் நடிகர்களில் திரைப்படத்தை பார்த்து பாராட்டி சூர்யா வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subbaraj) இயக்கத்தில் இறுதியாக டோரதி (Dorothy) படமானது வெளியானது. இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தை பார்த்த சூர்யா பாராட்டியுள்ளார். இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அது எனக்கு ஒரு பெரிய கனவு.. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன விஷயம்!
டோரதி திரைப்படத்தை வெகுவாக பாராட்டிய நடிகர் சூர்யா:
அந்த பதிவில் சூர்யா, “பேசாப் பொருளை பேசதுணிந்திருக்கீர்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொல்லவேண்டியதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடிப்பு இந்த படத்திற்கு உயர் சேர்த்திருக்கிறது. மேலும் இசைஞானி இளையராஜாவின் இசை மனதை நெகிழ வைத்துள்ளது. இந்த டோரதி படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்”என அதில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அப்பா – அம்மாவை நான் வெவ்வேறு விதங்களில் ஒப்பிடுவேன்… ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்
கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தை வாழ்த்தி நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
டோரதி
பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்.
இயக்குநர் @karthiksubbaraj சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். Keerthy, Sanath, Rishikanth ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது.
இசைஞானி @ilaiyaraaja அவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது.படக்குழுவினர்…
— Suriya Sivakumar (@Suriya_offl) October 1, 2026
இந்த டோரதி படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிஇருந்த நிலையில், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



