தனுஷ் 56-வது படத்தின் பூஜை கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Dhanush 56 movie pooja ceremony | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக தனுஷ் 56 என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றுள்ள நிலையில் அந்த நிகழ்வின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் அவ்வபோது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு விரைவாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் தற்போது தனது 55-வது படமான ஓம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்த உடனே தனது 56-வது படத்திற்காக நடிகர் தனுஷ் இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து உடன் கூட்டணி வைத்தார். முன்னதாக இந்த இயக்குநரின் இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து என்ற படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் வெளியாகும் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




தனுஷ் 56-வது படத்தின் பூஜை கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு:
மேலும் தனுஷின் 56-வது படம் ஒரு ரூரல் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்க உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் வடிவேலு உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ள நிலையில் படத்தின் பூஜை மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த விழாவின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது ஒன் நேம் பாடலின் லிரிக்கள் வீடியோ
தனுஷ் 56 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#D56 – Here’s a glimpse of a grand beginning to an exciting journey
Summer 2027 release 💥 @dhanushkraja #Vadivelu @iam_SJSuryah @Vijay_B_Kumar @PreityMukundan @tamizh018 @SaiAbhyankkar #SrikaraStudios @SitharaEnts @PrimarkProd @vamsi84 #SaiSoujanya @lingasamy21 pic.twitter.com/9gO3IFuUVL
— Sithara Entertainments (@SitharaEnts) September 30, 2026
Also Read… நடிகர் மணிகண்டனின் பர்த்டே ஸ்பெஷல்… மக்கள் காவலன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!