AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடிகர் மணிகண்டனின் பர்த்டே ஸ்பெஷல்… மக்கள் காவலன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

Makkal Kavalan Movie Release Update | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மணிகண்டன். இவரது பிறந்த நாளை முன்னிட்டு இவரது நடிப்பில் உருவாகி வரும் மக்கள் காவலன் படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

நடிகர் மணிகண்டனின் பர்த்டே ஸ்பெஷல்… மக்கள் காவலன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!
மக்கள் காவலன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2026 19:21 PM IST

தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாக தனது பணியைத் தொடங்கியவர் மணிகண்டன். இவரது வசனத்தில் வெளியான விக்ரம் வேதா படம் ரசிகர்களிடையே தற்போதும் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதே விக்ரம் வேதா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு குடும்பஸ்தன் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது.

ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் இளைஞனின் வாழ்க்கை அந்த குடும்பத்தினரால் எப்படி எல்லாம் சிக்கல்களை சந்திக்கின்றது என்பது குறித்து அந்தப் படம் பேசி இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் படம் மக்கள் காவலன்.

மக்கள் காவலன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு:

இந்த மக்கள் காவலன் படத்தை இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வரும் நிலையில் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.

இந்த நிலையில் நடிகர் மணிகண்டன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற டிசம்பர் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஆடியோ லான்ச் இல்லையா? ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும்?

மக்கள் காவலன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்!

Follow Us