Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிடில் கிளாஸ் பையன் பிம்பத்திலிருந்து விடுபட வேண்டும் – நடிகர் மணிகண்டன்

Actor Manikandan: தமிழ் சினிமாவில் எழுத்தாளர், வசகர்த்தா என பலப் படங்களில் வேலை செய்த மணிகண்டன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் தொடர்ந்து அவருக்கு மிடில் கிளாஸ் பையன் வேடங்களே வருவது குறிப்பிடத்தக்கது.

மிடில் கிளாஸ் பையன் பிம்பத்திலிருந்து விடுபட வேண்டும் – நடிகர் மணிகண்டன்
நடிகர் மணிகண்டன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2025 13:29 PM

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் நடிகராக இருப்பவர் நடிகர் மணிகண்டன் (Actor Manikandan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மணிகண்டனின் படங்கள் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்க்க காரணம் தொடர்ந்து மிடில் கிளாஸ் பையனாக நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் நபராகவே ரசிகர்களுக்கு காட்சியளிக்கிறார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தொடர்ந்து தனக்கு வரும் மிடில் கிளாஸ் பையன் கதாப்பாத்திரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.

மிடில் கிளாஸ் பையனாக நடிப்பது சலிப்பாக உள்ளது:

நடிகர் மணிகண்டன் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, தொடந்து படங்களில் ‘மிடில் கிளாஸ் பையனாக’ நடிப்பது எனக்கு இப்போது சலித்து என்று அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் மணிகண்டன் உண்மையைச் சொல்லப் போனால், நான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ஏன் எப்போதும் மிடில் கிளாஸ் பையனாக நடிக்கிறேன் என்று ரசிகர்களும் என்னிடம் கேட்கிறார்கள்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் மணிகண்டனின் பேச்சு:

அவர்களின் கேள்வி மிகவும் நியாயமானது. மேலும் மிடில் கிளாஸ் பையனாக நடிப்பதிலும் எனக்கு சலிப்புத்தட்டிவிட்டது. மேலும் நான் பல வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், எனக்கு வரும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து இதே பாணியில் இருக்கின்றன எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர்கள் சொல்லும் விசயம்:

தொடர்ந்து இந்த மாதிரியான கதைகளா என்னிடம் வருவதால் நான் நான் இயக்குனர்களிடம் ஏன் இப்படிப் பட்ட கதைகளையே எடுத்து வருகிறீங்கள் என்று கேட்டேன். அப்போது ​​அவர்கள் சார், நீங்கள் மிடில் கிளாஸ் பையன் கதாப்பாத்திரத்தி மிகவும் பொருத்தமாக நடிக்கிறீர்கள். மேலும் இந்த மாதிரி கதை எழுதும்போது உங்களை மனதில் வைத்துதான் எழுதுகிறோம் என்று அவர்கள் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தனர்.