Sivakarthikeyan: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Respond: இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த கூட்டணி படமானது தள்ளிப்போன நிலையில், அது குறித்து வெங்கட் பிரபு விளக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிப்ளை பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகிவந்த நிலையில், பல ஹிட் படங்கள் அமைந்துள்ளது. இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் தி கோட் (The GOAT). இந்த படத்தில் தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கூட்டணியில் புதிய திரைப்படமானது உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் சேயோன் (Seyon) படத்தில் இணைந்திருந்தார்.
இந்த படத்தை முடித்துவிட்டு தற்போது இயக்குநர் ராஜ்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் SK27 படத்தில் இணைந்துவிட்டார். அந்த வகையில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் காம்போ படம் என்ன ஆகியது என ரசிகர்களின் கேள்விக்கு வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். அதற்க்கு சிவகார்த்திகேயனும் பதிலளித்துள்ளார்.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் குறித்து கங்கை அமரனின் பேச்சு… இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்!
வெங்கட் பிரபுவின் பதிவிற்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்:
இயக்குநர் வெங்கட் பிரபு, “சிவகார்திகேயனுடனான படம் கைவிடப்பட்டது குறித்தும், அந்த படத்திற்கு பதிலாக வெங்கட் பிரபு இணையும் புதிய படங்கள் குறித்தும் அவர் அதில் தெரிவித்திருந்தார். அந்த பதிவிற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், சார் நம்ம குடும்பம் சார், இதுக்கு பொய் நீங்க சீரிஸ்-ஆ ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க..
இதையும் படிங்க: ஆடியோ லான்ச் இல்லையா? ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும்?
உங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி. மேலும் உங்களின் அடுத்த திரைப்படத்திற்கு எனது வாழ்த்துக்கள். சார், இதை நான் முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன் – நான் எப்போதுமே ஒரு வெங்கட் பிரபு ரசிகனாக இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்” என அதில் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபுவின் பதிவுக்கு சிவகார்த்திகேயன் அளித்த ரிப்ளை குறித்த எக்ஸ் பதிவு:
Sir, we are family. Idhuku poi neenga serious-ah reply pannitu irukeenga!
Thank you so much for your wishes, sir, and my best wishes for your next project 🤗
Sir, I’ve told you this before, and I’m saying it again – I’ll always be a VP fan. Waiting to collaborate with you… https://t.co/HGxdc876NC
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 28, 2026
தற்போது சிவகார்த்திகேயன் சேயோன் திரைப்படத்தில் நாயகனாக நடித்துவரும் நிலையில், ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கு பிறகு இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் SK27 என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ள நிலையில், வரும் 2027ம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.