AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிவகார்த்திகேயன் குறித்து கங்கை அமரனின் பேச்சு… இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்!

Director Venkat Prabhu about Sivakarthikeyan | கங்கை அமரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறித்து தனது கருத்தை கூறினார். அந்த கருத்து வைரலாகி வரும் நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் குறித்து கங்கை அமரனின் பேச்சு… இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்!
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2026 13:15 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது நடிப்பில் வெளியான படங்களைவிட இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான அஜித் குமார், விஜய் மற்றும் கார்த்தி என பலரை இயக்கி உள்ளார் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். தளபதி விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படத்தில் நடித்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மதராஸி படம் முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பராசக்தி படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனது 26-வது படத்திற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்து சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் கூட்டணி கைகூடவில்லை என்று செய்திகளும் சினிமா வட்டாரங்களில் வெளியானது.

சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை.. வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் பெயர் குறிப்பிடாமல் அவர் தனது மகனை அவமதித்துவிட்டதாகவும், ஹிட் படத்தை கொடுத்தால் ஒருவருக்கு கொடுத்த கால்ஷீட்டை முடிக்க மாட்டாரா என்று விமர்சித்து பேசினார். இது அவர்களின் குடும்பத்திற்கே அவமானம் என்பது போலவும் பேசி இருந்தார். கங்கை அமரன் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் தான் என்பதை உணர்ந்த ரசிகர்கள் தொடர்ந்து இதுகுறித்து இணையத்தில் பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த சர்ச்சை குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் SK எனக்கு எப்போதும் ஒரு நெருங்கிய நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர். ஒரு தந்தையாக, தனது சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் தாமதமாகும் போது ஏற்படும் விரக்தி இயல்பானதே. அவருக்கு ஒருவேளை முழு விவரங்களும் தெரிந்திருக்காது; அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது.

பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்கப்படாமல் போனது. அவ்வளவுதான். இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. சரியான நேரம் அமைந்து, ஒரு நல்ல கதைக்களம் அமைந்தால், SK-வுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புவேன் என்றும் வெங்கட் பிரபு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… எனக்குதான் ரோஷமே இல்ல.. போட்டியாளர்களிடம் கடுப்பான விஜய் சேதுபதி – புரோமோ இதோ!

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… SK27: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்த கயாடு லோஹர்.. SK27 படக்குழு பகிர்ந்த பூஜை கிளிக்ஸ்!!

Follow Us