AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இசைக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Meesaya Murukku 2 Review: மக்கள் மத்தியில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் மிகவும் பேமசானவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் இயக்கத்தில், நடிப்பில் மற்றும் இசையில் இன்று (25/09/2026) வெளியாகியுள்ள படம்தான் மீசையமுறுக்கு 2. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கான விமர்சனங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இசைக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
மீசையமுறுக்கு 2 விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Sep 2026 12:59 PM IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நபராக இருந்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Aadhi). இவரை ரசிகர்கள் “ஹிப்ஹாப் தமிழா” என்று அன்போடு அழைப்பதுண்டு. இவர் ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்களை பாடியும், இசையமைத்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் ஆல்பம் பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கு எங்கும் ஒலித்த நிலையில், இவருக்கு சினிமாவில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “ஆம்பள” என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக நுழைந்த நிலையில், இது இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். மேலும் கடந்த 2017ம் ஆண்டில் மீசையமுறுக்கு (Meesaya Murukku) என்ற படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். இதன் பிறகு பல படங்களை இயக்கியும் உள்ளார்.

அந்த விதத்தில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின், இவரின் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மீசைய முறுக்கு 2. இப்படம் மீசையமுறுக்கு 1 படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இன்று (25/09/2026) இந்த மீசையமுறுக்கு 2 (Meesaya Murukku 2) படம் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: பார்க்கிங் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்.. வெளியானது SK27 பட அறிவிப்பு போஸ்டர்!

மீசையமுறுக்கு 2 படம் எப்படி இருக்கு:

இந்த மீசையமுறுக்கு 2 படமானது, பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதில் இருக்கு ஒரு முக்கிய கூறு மற்றும் மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படமானது எந்தவித ஆதரவும் இல்லாமல் எழுச்பெறும் ஒருவரின் கதையை பற்றியது. இதன் கதைக்களம் அப்படியே இருந்தாலும், கையாளப்பட்ட விதம் வேறுபட்டது. இசைத்துறைக்குள் இருக்கும் அரசியலையும், அது எந்தப் பின்புலமும் இல்லாத கலைஞர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் விவாதிக்க ஆதி மீசையமுறுக்கு 2 படத்தை இயக்கியுள்ளார்.

மீசையமுறுக்கு 2 படத்தின் விமர்சனம் குறித்த எக்ஸ் பதிவு:

மீசையமுறுக்கு 2 படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி உள்ளது:

இப்படத்தின் நடிகர் ஆதி கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் பாபா பாஸ்கர், கருணாஸ், ஹர்ஷத் கான், மற்றும் யோகி பாபு போன்ற நடிகர்களின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் இதில் நடிகைகளாக ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சார் மற்றும் கெட்டிகா சர்மா போன்றவர்களின் கதாபாத்திரம் கொஞ்சமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: திரைத்துறையில் நான் செய்த மிகப்பெரிய தவறு – நடிகை திவ்ய பாரதி சொன்ன விசயம்

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?:

ஆதி ஜென் Z தலைமுறை பார்வையாளர்களைக் கவரவே அதிக கவனம் செலுத்துவது போல் தெரிகிறது, மேலும் திரைக்கதை சில சமயங்களில் சீரற்றதாக உள்ளது. இருப்பினும், படம் முழுவதும் அந்த உணர்வை அவரால் உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறது. இப்படம் வண்ணமயமாக உள்ளது மற்றும் ஒரு சிறப்பான கிளைமேக்ஸை கொண்டுள்ளது. இது அதன் முந்தைய படத்துடன் ஒப்பிடும்போது சற்றே சாதாரணமாகவே உள்ளது. ஹிப்ஹாப் ஆதியின் ரசிகர்கள் மற்றும் வித்தியாசமான இசையை சார்ந்து இருக்கும் கதையை விரும்புபவர்கள் நிச்சயம் திரையரங்குகள் சென்று பார்க்கலாம்.

Follow Us