AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rasi Palan Today: நவம்பர் 12ஆம் தேதி ராசிப்பலன்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ?

Daily Horoscope in Tamil: நவம்பர் 12ம் தேதியான இன்று வியாழக்கிழமை. ஐப்பசி மாதம் 26ம் தேதி. இன்றைய ராசிபலனை பொறுத்தவரை கன்னி ராசிக்கு வேலை வாழ்க்கை சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.

Rasi Palan Today: நவம்பர் 12ஆம் தேதி ராசிப்பலன்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Nov 2026 06:05 AM IST

மேஷம்

வேலையில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறிய முயற்சியிலேயே சொத்து மற்றும் நிதி சார்ந்த விவகாரங்கள் சீராகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். புதிய வேலை தொடர்பாக நிறுவனங்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு தொழில், வேலைவாய்ப்பில் அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நிலை சுமாராக இருக்கும்.

ரிஷபம்

வேலையில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், உற்சாகத்துடன் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வாழ்க்கையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கும். வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தப் பாதிப்பும் இருக்காது. வீட்டில் நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நீண்டகாலக் கடன் சுமையைக் குறைத்துக் கொள்வீர்கள். கூடுதல் வருமானத்திற்கான வழிகள் நல்ல பலனைத் தரும். உறவினர்கள், நண்பர்களுடன் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். ஓரிரு உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுனம்

வேலையில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் ஊக்கமளிக்கும் வகையில் வளர்ச்சி அடையும். நாள் முழுவதும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். நல்லதொரு நிகழ்வு நடைபெறும். ஓரிரு நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வேலை மற்றும் திருமண முயற்சிகள் கைகூடும். உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். பொருளாதார முயற்சிகள் நல்ல பலனைத் தரும். விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்

தொழில் மற்றும் வேலை தொடர்பாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வியாபாரம் லாபகரமாக முன்னேறும். தனிப்பட்ட பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படும். லேசான உடல்நலக் குறைவும் பாதிக்கலாம். பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து பெருமளவு விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மூத்த ஒருவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.

சிம்மம்

ஏழரைச் சனியின் தாக்கத்தால் முக்கியமான பணிகள் மற்றும் விவகாரங்களில் தாமதம் ஏற்படும். லேசான உடல்நலப் பிரச்சினைகள், பணிகளில் அலைச்சல், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் போன்றவை இருக்கும். வேலையில் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் மெதுவாகவே முன்னேறும். வாழ்க்கைத் துணைக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருப்பீர்கள். குழந்தைகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் உடல்நலம் கவலை அளிக்கலாம்.

கன்னி

வேலை வாழ்க்கை சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வீட்டிற்கு விருப்பமான உறவினர்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மூத்தவர்களின் உதவியால் ஒரு பிரச்சினை எளிதில் தீர்க்கப்படும்.

துலாம்

தொழில் மற்றும் வேலையில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபாரம் லாபப் பாதையில் செல்லும். நாள் முழுவதும் சாதகமாகவும், இணக்கமாகவும் இருக்கும். நினைத்த பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். உடல்நலம் பெருமளவு சீராகும். பொருளாதார நிலை கணிசமாக மேம்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருப்பீர்கள். அரசியல் பிரமுகர்களுடனான நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.

விருச்சிகம்

வேலையில் உங்களது முடிவுகளுக்கும் சிந்தனைகளுக்கும் மதிப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஊக்கமளிக்கும் சூழல் நிலவும். தொடங்கிய பணிகளை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகச் செல்லும். பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உடல்நலப் பிரச்சினை லேசாகப் பாதிக்கலாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். சொந்தப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

தனுசு

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் லாபம் பெறுவீர்கள். வேலையில் அதிகாரிகளின் ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும். வருமானம் நன்றாக இருக்கும். அதிகப்படியான தாராள மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் அறிமுகம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களின் முயற்சிகளும், திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களின் முயற்சிகளும் கைகூடும் வாய்ப்புள்ளது. உடல்நலம் பெரும்பாலும் சாதகமாக இருக்கும்.

மகரம்

தொழில் மற்றும் வேலையில் பணிச்சுமையும் பொறுப்புகளும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாத சூழல் உருவாகும். சில தனிப்பட்ட பணிகளை ஒத்திவைக்க வேண்டியிருக்கும். வருமானத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் செல்லும். வாழ்க்கைத் துணையின் பணித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரப் பகுதிகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தற்போதைக்கு யாருக்கும் வாக்குறுதி அளிக்காமல் இருப்பது நல்லது.

கும்பம்

வேலையில் அதிகாரிகள் உங்களையே அதிகம் சார்ந்திருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேகமாக முன்னேறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு நிறைவாகக் கிடைக்கும். பொருளாதார மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பெருமளவு விடுபடுவீர்கள். பணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். வருமானம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். நண்பர்களால் சிறிதளவு பண இழப்பு ஏற்படலாம்.

மீனம்

தொழில், வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான சூழல் நிலவும். கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் சீராக நடைபெறாமல் போகலாம். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானப் பிரச்சினைகளும் ஏற்படலாம். வீட்டிலும் வெளியிலும் அதிக நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். ஒவ்வொரு பணிக்கும் ஒன்றுக்கு இரண்டு முறை அலைய வேண்டியிருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்கள் அவதூறு பேசலாம். பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் செயல்படுவது நல்லது.

Follow Us