திரைத்துறையில் நான் செய்த மிகப்பெரிய தவறு – நடிகை திவ்ய பாரதி சொன்ன விசயம்
Actress Divya Bharathi | தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருபவர் நடிகை திவ்ய பாரதி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திவ்ய பாரதி. இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்த நிலையில் கடந்த 2017-ம் தமிழ் சினிமாவில் வெளியான முப்பரிமாணம் என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அந்தப் படத்தில் அவர் நாயகியின் தோழியாக நடித்து இருந்த நிலையில் அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப் படத்திலேயே நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை திவ்ய பாரதி தமிழ் சினிமாவில் வெளியான பேச்சுளர் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்து உள்ளார். இதுதான் இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து நடிகை திவ்ய பாரதி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மகாராஜா மற்றும் கிங்ஸ்டன் ஆகியப் படங்களில் நடித்து உள்ளார். இது மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் தற்போது நடிகை திவ்ய பாரதி அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




திரைத்துறையில் நான் செய்த மிகப்பெரிய தவறு:
அதன்படி திவ்ய பாரதி பேசியதாவது, நான் செய்த மிகப்பெரிய தவறு, போதுமான அளவு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளாததுதான். ‘பேச்சிலர்’ படம் வெளியான பிறகு, வாய்ப்புகள் இயல்பாகவே என்னைத் தேடி வரும் என்று நான் நினைத்தேன். என் திறமை மீதான அதீத நம்பிக்கையால் அப்படி நினைக்கவில்லை; திரையுலகம் அப்படித்தான் இயங்குகிறது என்று நான் உண்மையாகவே நம்பினேன்.
எனக்குத் திரையுலகப் பின்னணி இல்லாததால், வாய்ப்புகளைப் பெற நானே முன்வந்து மக்களைச் சந்தித்துத் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் உணரவில்லை. அதே வேளையில், நல்ல வாய்ப்புகளுக்காக நான் காத்திருந்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் அதிக காலம் காத்திருந்துவிட்டதாகவும், அதனால் என் திரைப்பயணம் தாமதமானதாகவும் தோன்றுகிறது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The biggest mistake I made was not networking enough. After #Bachelor released, I assumed film opportunities would naturally come my way. It wasn’t overconfidence in my abilities I genuinely thought that’s how the industry worked.
Since I don’t come from a film background, I… pic.twitter.com/YH7g7JCIOl
— Movies Singapore (@MoviesSingapore) September 24, 2026
Also Read… பிக்பாஸில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஜேசன்… திணறிய எதிரணி தலைவர் ராகவ் – வைரலாகும் வீடியோ!