டோரத்தி படம் எப்படி இருக்கும்? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்
Director Karthik Subbaraj talks about Dorothy movie | இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 10-வது படமாக உருவாகி உள்ளது டோரோத்தி. இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பீட்சா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு சின்னத்திரையில் நடைப்பெற்ற நாளைய இயக்குநர் என்ற போட்டியில் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் பங்கேற்ற பலர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களாக உள்ளனர். அதில் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்தும் படத்தை இயக்கி உள்ளார்.
அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் டோரத்தி. இந்தப் படம் நாளை 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




டோரத்தி படம் எப்படி இருக்கும்? கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்
இந்த நிலையில் சமீபத்தில் டோரத்தி படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியது தற்போது இணையத்தில் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நான் மெர்குரி செய்தேன், பிறகு தலைவருடன் பேட்ட செய்தேன், ஆனால் என் சிறந்த படைப்பு இறைவி என்று பலர் சொல்கிறார்கள். இறைவியை விட, இப்போது டோரதி மனித உணர்வுகளுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. நான் மகான் படத்திற்குப் பிறகு அதைச் செய்யவிருந்தேன், ஆனால் ஜிகர்தண்டா டபுள் X மற்றும் ரெட்ரோ செய்தேன். ரெட்ரோவிற்குப் பிறகு, பிக் ஹீரோ அல்லது பெரிய பட்ஜெட் படங்கள் வந்தாலும், நான் முதலில் டோரத்தி இயக்கிவிட்டு, பிறகு மற்ற பெரிய படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த ஆனந்தி – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KarthikSubbaraj:
“I did #Mercury, then did #Petta with Thalaivar, but many says that my best work was #Iraivi. More than Iraivai, now #Dorothy is close to human emotions. I was supposed to do it after #Mahaan, but did #JigarthandaDouleX & #Retro. After Retro, even when Big Hero… pic.twitter.com/8LSM9MAUzU— AmuthaBharathi (@CinemaWithAB) September 22, 2026
Also Read… 26 ஆண்டுகளைக் கடந்தது சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான உயிரிலே கலந்தது படம்!