AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது படக்குழு – என்ன காரணம் தெரியுமா?

Anbil Avan Movie Release Postponed | நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தற்போது ஒத்தி வைத்துள்ளனர்.

அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது படக்குழு – என்ன காரணம் தெரியுமா?
அன்பில் அவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Sep 2026 21:42 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் சினிமாவில் நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய இவர் ஆரம்ப காலக்கட்டட்தில் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இதில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து உள்ளார். அதன்படி சமீபத்தில் இவர் டூப் இல்லாமல் 70 உயரத்தில் இருந்து குதித்து ஸ்டண்ட் செய்யும் பிடிஎஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது படக்குழு:

அந்த வகையில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த அன்பில் அவன் படம் முன்னதாக 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பிடிஎஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது அசோக் செல்வன் வெளியிட்டுள்ள பதிவில் அன்பில் அவன்’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோக கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் வெளியிடுவதற்கு எங்களை ஊக்குவித்துள்ளது. அதன் காரணமாக படம் வருகின்ற 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவித்துள்ளது.

Also Read… ஏழு கடல் ஏழு மலை படத்தின் கேரள ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

அசோக் செல்வன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… நானியின் ப்ளடி ரோமியோ படத்தில் இணைந்த பிரித்விராஜ் சுகுமாரன்? வைரலாகும் தகவல்

Follow Us